chennireporters.com

நடு வானில் தத்தளித்த பயணி.உயிரை காப்பாற்றிய ஆளுநர் தமிழிசை.

நடுவானில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பயணி ஒருவரை புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணியின் உயிரை காப்பாற்றினார்.

இந்த செய்தி விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் அவரை பாராட்டினர்.  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று அதிகாலை டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 04:00 மணியளவில் யாராவது இந்த விமானத்தில் டாக்டர்கள் இருக்கிறீர்களா என்று விமான பணிப்பெண் கேட்டதும் விமானமே அலறி துடித்தது யாருக்கு என்ன ஆயிற்று என்று விமான பணிப்பெண்ணை கேட்டனர்.

ஆளுநர் தமிழிசையும் விமான பணிப்பெண்ணை அழைத்து யாருக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்.  அப்போது சக பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

உடனே ஆளுநர் மயக்கம் அடைந்து கிடந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினார்.  விமான பணிப்பெண்ணுக்கு இவரை அடையாளம் தெரியாமல் பயணிக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் தமிழிசை சக பயணியின் உயிரை காப்பாற்றினார்.  சக பயணிகள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாராட்டினர்.  ஆனால் ஆளுநரோ நான் ஒரு மருத்துவராக என் கடமையைத்தான் செய்தேன் என்று சாதாரணமாக சொல்லி கடந்து சென்றார்.

இரு மாநில ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.   பல்வேறு தரப்பிலிருந்தும் ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் அவர்களுக்கே பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!