chennireporters.com

கஞ்சா போதையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞர்கள் மூடி மறைத்த போலீஸ்.

கஞ்சா போதையில் மூதாட்டியை கொலை செய்த இளைஞர்கள் மூடி மறைத்த போலீசார்.  திருவள்ளூர் அடுத்த திருவலாங்காடு அருகே உள்ளது மணவூர் கிராமம் அதன் அருகே உள்ள காபுலகண்டிகை பகுதியை சேர்ந்தவர். வைத்தியநாதன் இவரது மனைவி குமாரி. கடந்த 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்து வந்தார். சம்பவ தினத்தன்று குமாரி காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டு இரவு எட்டு மணி அளவில் மணவூர் ரயில் நிலையத்திலிருந்து தொழுதாவூர் சாலை அருகே வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் நடந்து சென்றதை அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் குமாரி வீடு போய் சேரவில்லை.

 

அடுத்த நாள் காலையில் அந்தப் பகுதியில் பிணமாக கிடந்தார்.  இது குறித்து அந்த பகுதி மக்கள் திருவலாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குமாரியின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதே பகுதியில் கடந்த ஆண்டும் ஒரு பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அந்தப் பகுதியில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அந்த பகுதியில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்கள். கஞ்சா போதையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

 

இவர்கள் தான் குமாரியை கொலை செய்திருக்க வேண்டும் என்கின்றார்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர். இதுகுறித்து அவரது மகன் ராஜா காவல்துறைக்கு அளித்த புகாரில் தன் அம்மாவை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார் . அந்த புகாரில் திருவாலங்காடு போலீசார் எட்டு மாதமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அது இயற்கையாக நடந்த மரணம் என்று மூடி மறைத்து விட்டார்கள் ஆனால் அவரது உடம்பில் நிறைய காயங்கள் இருப்பதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பாக காவல்துறை இயக்குனர் தமிழக முதல்வர் என அனைத்து அதிகாரிகளுக்கும் தொடர்ந்து கடிதம் எழுதி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் அவரது மகன் ராஜா.

இது குறித்து அவர் நம்மிடம் எனது அம்மா இறந்தது தொடர்பாக எனக்கு தகவல் தெரிந்தவுடன் நான் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தேன். அப்போது போலீசார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள் அங்கு பார்த்தவுடன் வேன் ஓட்டுநர் என் அம்மா உடலை பார்க்கச் சொன்னார் நான் பார்த்தேன் எனது அம்மாவின் உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.

 

ஆடைகள் கிழிந்து  அம்மாவின் உடலில் பல இடங்களில் ரத்த காயங்களும் இருந்தன.    அதாவது கை, தோல்பட்டை, தலை ஆகிய பகுதிகளில் காயம் உள்ளது. என் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதை போலீசாரும் அரசு டாக்டர்களும் மூடி மறைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முன் வைக்கிறார் ராஜா .

பின்னர் அந்தப் பகுதியில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் திருமண மண்டபம் கட்ட முடிவு செய்திருக்கிறார். ஆனால் மண்டபம் கட்டாமல் விட்டு  விட்டார்.அந்த இடத்தில் ஒரு ரூம் மட்டும் கட்டியிருக்கிறார். அந்த இடத்தில் மணவூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் தினமும் மாலை நேரங்களில் கஞ்சா பிடித்து வருவதாகவும் அதை பல நேரங்களில் அங்குள்ள பொதுமக்கள் திருவலங்காடு காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அவர்களால் தான் தன் அம்மாவிற்கு ஏதாவது நடந்திருக்கும் என்கிறார் ராஜா.  அது தவிர அவரது அம்மா இறந்து கிடந்த இடம் ரயில்வேவுக்கு சொந்தமான இடம். அந்த கொலை குறித்து ரயில்வே காவல்துறையினர் தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும், ஏன் உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள் என்று தெரியவில்லை .

என் அம்மாவுக்கு வாயில் பல் உடைந்து ஈரில் ரத்தம் வடிந்து இருக்கிறது. அது குறித்து எந்த தகவல்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்தப் பகுதியில் கஞ்சா வாலிபர்கள் தொந்தரவு குறித்து அந்தப் பகுதியை சார்ந்த குசல குமாரி என்பவர் ஸ்டேன்லி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கஞ்சா வாலிபர்கள் தொடர்பாக பல முறை புகார் அளித்திருக்கிறார் அதனால் கோபமடைந்த கஞ்சா வாலிபர்கள் குசல குமாரி மீது கடும் கோபத்தில் இருந்து உள்ளனர்.

அவர் மீது இருந்த  கோபத்தில் கஞ்சா வாலிபர்கள் என் அம்மா மீது காட்டி இருக்கிறார்கள் காட்டியிருக்கக்கூடும் ஆள் மாறி அவர்கள் என் அம்மாவை அடித்து கொலை செய்திருப்பார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார் ராஜா. போலீசார் இவர் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல்  இருக்கிறார் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை.

அரசு தரவேண்டிய அனைத்து ஆவணங்களையும் அறிக்கைகளையும் காலதாமதமாகவே தந்திருக்கிறார்கள் சந்தேகத்திற்கு இடமான கொலையை போலீசார் மோப்ப நாய் வைத்து ஏன் விசாரிக்கவில்லை அந்தப் பகுதியில் உள்ள கஞ்சா விற்கும் இளைஞர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார் இன்ஸ்பெக்டர் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார் ராஜா.

 

இது குறித்து நாம் விசாரித்த போது திருவள்ளூர், கடம்பத்தூர் ,மணவூர் ,திருவலாங்காடு, அரக்கோணம் ,சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய ரயில் மார்க்கங்களில் கஞ்சா வியாபாரம் படு ஜோராக நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். காட்பாடி ரயில் நிலையத்தில் இதுவரை நூற்று கணக்கில் கஞ்சா ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

திருவலாங்காடு, மணவூர், பாகசாலை, அரிச்சந்திராபுரம், மோசூர், ஒரத்தூர், போன்ற பகுதிகளில் கஞ்சா வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது . மணவூர் பகுதியில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் ஆனால் இதுவரை திருவலங்காடு போலீசார் அவர்கள் மீது எந்தவித வழக்கோ, எந்த இளைஞர்களையும் இதுவரை கைது செய்யவில்லை, கஞ்சா போதையில் ஆள் மாறி கொலை செய்து இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்த மர்ம கொலையில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் மூடி மறைத்து விட்டார்கள் திருவலாங்காடு போலீசார்.

இதையும் படிங்க.!