chennireporters.com

காதல் மேட்டரில் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்டிங் வாங்கிய போலீசார்.

காதல் ஜோடிகளை பிரித்து கட்டப்பஞ்சாயத்து செய்து கட்டிங் வாங்கிக்கொண்டு காதலனை போலியான வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பிய செய்தி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

வழக்கறிஞர் கோகுல கிருஷ்ணன்

திருவெற்றியூர் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சௌமியா சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.  இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.  இந்த காதல் விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்து அம்மா பலமுறை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி தன் மகள் சௌமியாவை வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணனிடம் பேச விடாமல் தடுத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அடிக்கடி சௌமியாவை அவருடைய அம்மா கொடுமைப்படுத்துவதாக தெரிகிறது.  இதில் பாதிக்கப்பட்ட சௌமியா தன்னுடைய காதலன் கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து   தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோகுலகிருஷ்ணன் சௌமியாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மதுரைக்கு  காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் தன் மகளை வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் கடத்திச்  சென்றுள்ளதாக சாத்தங்காடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.  அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் தான் தன் மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் என்ற சொன்னவுடன் எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரம்மானந்தன் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடத்தில் பெண்ணின் பெற்றோர் நீங்கள் அந்த பெண்ணை கடத்தி செல்வதாக புகார் அளித்திருக்கிறார்கள். காவல் நிலையம் வாருங்கள் என்று தெரிவித்தார்.

அது தவிர நீங்கள் இருவரும் மேஜரானவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது.  இருப்பினும் பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்திருக்கிறார்கள் ஆகவே விசாரணைக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளார். அதற்கு பதில் பேசிய வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் சட்டம் எனக்கும் தெரியும் உங்கள் பேச்சை நான் மதிக்கிறேன் கண்டிப்பாக திருமணம் செய்துவிட்டு விசாரணைக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் அந்த பெண்ணிடம் செல்போனை கொடுங்கள் என்று ஏசி பிரம்மானந்தன் கூறியுள்ளார். ஏசி பிரம்மானந்தரிடம் பேசிய சௌமியா அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக எந்தவித பதட்டமும் இல்லாமல் பதில் அளித்திருக்கிறார். நான் என்னுடைய விருப்பத்தின் பேரில் தான் கோபாலகிருஷ்ணனுடன்  வந்தேன் நாங்கள் இருவரும் நான்காண்டுகளாக காதலித்து வருகிறோம்.

 

எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரமாணந்தன் சௌமியாவிடம் பேசிய ஆடியோ

நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லியுள்ளார். உங்கள் வீட்டில் உன்னை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்திருக்கிறார்கள் உன்னை அவர்கட்டாயப்படுத்தினாரா அடித்தாரா மிரட்டினாரா என்று கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொன்ன சௌமியா நாங்கள் இருவரும் விருப்பத்துடன் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில் ஏசி பிரம்மானந்தன் எந்த காரில் செல்கிறீர்கள்? காரின் கலர் என்ன தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலை கேட்டுக்கொண்டு சினிமா படத்தில் வருவதைப் போல ஒரு போலீஸ் டீமை அனுப்பி அவர்களை கைது செய்து அழைத்து வருமாறு உத்தரவிட்டிருக்கிறார்.  இந்த நிலையில் பாண்டிச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் சந்தோஷமாக சிரித்து பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்த காதல் ஜோடியை மடக்கிய போலீசார்  சௌமியாவை தனி காரில் அவர்களது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.  கோகுல கிருஷ்ணனை  மிரட்டி சாத்தங்காடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அப்போது ஏற்கனவே தயாராக வழக்கு பதிவு செய்து அனைத்து நடை முறைகளையும் தயார்படுத்தி வைத்திருந்த சாத்தங்காடு இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் சௌமியாவை வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கடத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி விட்டனர் .   பின்னர் சௌமியாவை  அவரது பெற்றோருடன்  பத்திரமாக ஆனுப்பி வைத்தார்.

சாத்தாங்காடு இன்ஸ்கெக்டர் ஜெய்சங்கர்.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் ஒரு பெரிய கணிசமான தொகையை கை செலவுக்கு வாங்கிக் கொண்டதாகவும்,  வாங்கிய கட்டிங்கிற்கு விசுவாசமாக வேலை செய்து கொடுத்ததாகவும் சொல்கிறார்கள் வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன்  உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள்.

இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள விரும்பிய நிலையில் போலீசார்  மிரட்டி அவர்களை பிரித்து வழக்கறிஞர் கோகுல கிருஷ்ணன் மீது கடத்தல் வழக்கு போட வைத்ததற்கு காரணமாக இருந்தவர்கள் யார்? ஏன் போலீசார் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்கிற விடை தெரியாத பல கேள்விகள் சாத்தங்காடு காவல் நிலையத்தை சுற்றி வருகிறது.

வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணனுக்கும் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் ஏசி பிரம்மானந்தத்திற்கும் வழக்கு தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்கனவே இருந்தது இதை பயன்படுத்திக் கொண்டு பழைய பகையை மனதில் வைத்து வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்கள் என்கிறார்கள் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணனின் நண்பர்கள்

இதையும் படிங்க.!