chennireporters.com

இந்திய கிரிகெட் வீரர் முகமது ஷமி-யின் ராஜ வாழ்க்கை.. வீடு மட்டும் 43 ஏக்கர்.

முகமது ஷமி இந்த உலக கோப்பையில் 8 சாதனைகளை படைத்துள்ளார், உலக கோப்பையில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் என்பதில் துவங்கி, வெறும் 17 ஆட்டத்தில் 50 விக்கெட்கள், க்னாக்அவுட் ஆட்டத்தில் சிறப்பான பவுலிங் செய்து 48 வருட சாதனையை முறியடித்தது என உலக நாடுகளை வியக்க வைத்துள்ளார்

இத்தனை சாதனைகளை படைத்த முகமது ஷமி-யின் ஆடம்பர வாழ்க்கை குறித்து எத்தனை பேருக்கு தெரியும்..? இன்றைய நிலையில் முகமது ஷமி-யின் மொத்த சொத்து மதிப்பு 47 கோடி ரூபாய், வருடத்திற்கு 7 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இவர் பிசிசிஐ-யிடம் சம்பளமாக மட்டுமே 5 கோடி ரூபாய் பெறுகிறார். சில பிராண்ட் அம்பாசிட்டர் ஒப்பந்தம் மூலம் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 6.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தில்
அம்ரோஹா என்ற இடத்தில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட பண்ணை வீட்டை கட்டியுள்ளார்.இந்த வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் பிட்ச் உள்ளது, இதில் பிவுலிங் பயிற்சி செய்வதற்காகவே பல ஏற்பாடுகளை முகமது ஷமி செய்துள்ளார். லாக்டவுன் காலத்தில் இவருடைய வீட்டில் இருக்கும் மைதானத்தில் தான் சுரேஷ் ரெய்னா உடன் இணைந்து முகமது ஷமி பயிற்சி செய்தார். இந்த வீடு சுமார் 150 பிகா அளவில் கிட்டதட்ட 43 ஏக்கர் அளவில் உள்ளதாக தெரிகிறது.

மேலும் முகமது ஷமி-க்கு அலிநகர் பகுதியில் மிகவும் ஆடம்பரமான வீடு உள்ளது. 2015ல் வாங்கிய பண்ணை வீட்டுக்கு ஹாசின் என முகமது ஷமி பெயரிட்டார், இது தனது மனைவியின் பெயரான ஹாசின் ஜா-வின் பெயர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

முகமது ஷமியின் கார் கராஜ்-ல் ஆடி, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் எஃப் வகை மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்கள் உள்ளது, எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களின் ஒப்பிடுகையில் மாஸ் கலெக்ஷன் இது.

இதையும் படிங்க.!