chennireporters.com

அடிதடியில் முடிந்த வி.ஐ.பிகள் சண்டை . ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது போலீஸ் வழக்கு.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கண்ணன் மீது அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில்  செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

நேற்று இரவு சென்னையில் கார்கள் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டது. நடந்த வாக்குவாதத்தில் கே.எஸ். அழகிரியின் பேத்தி கன்னத்தில்  ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் அடித்ததாக கூறப்படுகிறது . அழகிரியே நேரில் வந்து அசோக்நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து. ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . காயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி கண்ணன்

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியான ஆர்.கண்ணன் ஐஏஎஸ் மீது போலி குற்றச்சாட்டுகளை கூறிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி தமிழகத்திலுள்ள காங்கிரஸ்காரர்களை தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு எதிராக திசை திருப்புகிறார். காரணம் என்ன என்று கேட்டால்: ‘உங்கள் சமுதாயம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளனர் என்றும்”  “நீங்கள் எல்லாம் எங்கள் கட்சியை ஆதரிப்பது கிடையாது என்றும்” கடும் கோபத்தில் பேசுகிறார்.

கே.எஸ்.அழகிரி சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் குண்டர்களை அனுப்பி, ஐஏஎஸ் அதிகாரிக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளார். இவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று “திராவிட மாடல்”  மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  கேட்டுக் கொள்கின்றனர்.

தமிழகத்திலுள்ள ஐஏஎஸ் சங்கங்கள் உடனடியாக இதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும். ”ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால்” சாதாரண மக்களுக்கு காங்கிரஸ் கட்சிக்காரர்களால் எந்தளவுக்கு மோசமான செயல் அந்த இடத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து, மாநில முழுவதும் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஒன்று திரண்டு கண்டன குரல் கொடுக்க வேண்டும்.

ஐஏஎஸ் சங்கத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என ஐஏஎஸ் அதிகாரிகள்  மற்றும் சங்கத்தினர் அனைவரும் இணைந்து தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைத்து ஆர்.கண்ணன் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கே.எஸ்.அழகிரியின் பேத்தியின் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். “அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரியை வீடு புகுந்து வெட்டுவேன் என்றெல்லாம் அழகிரியின் ஆட்கள் மிரட்டி இருக்கிறார்கள்” இது மிகவும் வருந்தத்தக்கது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த அனைத்து சமுதாய மக்களும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும் உடனடியாக கே.எஸ்.அழகிரியின் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பறிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் நேர்மையான மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவர். இரண்டு ஆண்டுகள் இந்து அறநிலைத்துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை சிறப்பாக பணியாற்றி இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார்.  அவர் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் கே.எஸ்.அழகிரியின் பேத்திக்காக அவரது மாண்பை கண்ணியத்தை சீர்குலைத்து உள்ளனர்.

இதனால் இவர்கள் யார் யார் அந்த இடத்தில் போராட்டம் செய்தார்களோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஐஏஎஸ் சங்க தலைவர் அவர்களுக்கும் துணைத்தலைவர் பொதுச் செயலாளர் இணை செயலாளர் பொருளாளர் போன்றவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாகவும், அனைத்து சமுதாய பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கும் ஈமெயில், ட்விட்டர், வாட்ஸ் அப் ,டெலிகிராம் போன்றவைகளில் தகவலை தெரிவித்து கே.எஸ்.அழகிரியின் மாநிலத் தலைவர் பதவியை பறிக்க வேண்டும்.

அழகிரி பேத்தி குடித்திருந்ததாக ஐ.ஏ.எஸ். தரப்பும், ஐ.ஏ.எஸ். அதிகாரி குடித்திருந்ததாக அழகிரி பேத்தியும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.போலீசிடமும் ஐ.ஏ.எஸ்.சிடமும் அழகிரியின் ஆதரவாளர்கள் கடுமையாக எகிறியிருக்கிறார்கள்.

” நீ எவனா இருந்தா எனக்கென்னா? வீடு புகுந்து வெட்டுவேன் ” என்றெல்லாம் அழகிரியின் ஆட்கள் மிரட்டி இருக்கிறார்கள். இந்த விவகாரம் முதல்வர் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!