chennireporters.com

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட மிகக்குறைந்த இளம்வயது போட்டியாளர்.

44வது செஸ் ஒலிம்பியாட் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக செஸ் போர்டை வழங்கினார்.

இந்த செஸ் போட்டியில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியாளர்களில் மிக குறைந்த வயதுடைய ஒரு போட்டியாளர் கலந்துகொண்டு வியப்பை ஏற்படுத்தி வருகிறார். பாலத்தீன நாட்டை சேர்ந்த 8 வயது வீராங்கனை சிறுமி ராண்டா செடர் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

இவர் இந்த போட்டியில் மிக வயது குறைந்த போட்டியாளர்களில் பங்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பிக் தொடக்கவிழாவில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மிகச் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சிகள் உலகம் முழுவதிலிருந்து கலந்து கொண்ட பல்வேறு போட்டியாளர்கள் இதை வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க.!