அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று இந்து தர்மத்தில் கூறவில்லை. இயலாதவருக்கு ஈன்றதை கொடுத்து உதவ வேண்டும் என்று தான் இந்து தர்மம் கூறுகிறது. அரிசி வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் இயலாதவருக்கு உணவளிக்க அரிசி நாம் தானமாக பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும். வாயில்லா ஜீவராசிகளுக்கு நாம் உணவளிக்க வேண்டும்.
இயலாதவர்கள் இல்லம் சென்று இயன்ற உதவியை செய்ய வேண்டும். எந்த நகை கடையிலும் நகை வாங்க வேண்டும் என்று இந்து தர்மம் கூறவில்லை.
வியாபாரிகளின் வியாபார யுக்தியை மக்களிடம் தவறான கண்ணோட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் பிறருக்கு உதவ வேண்டும் இன்று என்னத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு சிவபெருமான் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்
அக்ஷயதிரிதி அன்று காசியிலே பராசக்தி அன்னபூரணி இடம் எம்பெருமான் சிவன் அன்னத்தை பிச்சை வாங்கிய நாள். அக்ஷய பாத்திரம் என்பது அந்தப் பாத்திரத்தில் இருந்து அன்னம் எடுக்க எடுக்க குறையாமல் பசி என்று வருபவர்களுக்கு பசியாற்றுவதுதான் அட்சய பாத்திரம்.
மகாபாரதத்தில் கூட அக்ஷய பாத்திரத்தில் ஒரு பங்கு கதை அதில் உண்டு என்பதை வரலாறு கூறுகிறது. கையில் பணம் இல்லை தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருப்பவர்கள் கவலை வேண்டாம்.வீட்டில் இருக்கும் ஒரு துளி சர்க்கரை எடுத்து எறும்பிற்கு உணவளிக்கலாம்
பத்து ரூபாய் கொண்டு போய் கடையில் உப்பு வாங்கி பூஜையறையில் வைத்து வழிபடலாம்.ஒரு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு பசுக்களுக்கு தானம் வழங்கலாம்.ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்கி நாய்களுக்கு உணவு அளிக்கலாம்.பூனைகளுக்கு பால் கொடுக்கலாம்.இறைவன் கொடுக்கும் குணம் உள்ளவர்களை என்றுமே அரவணைத்துக் கொள்கிறாள்
பணத்தையும் தங்கத்தையும் மண்ணையும் வாங்கி வீட்டினுள் அடைத்து வைப்பது இயற்கைக்கு எதிரானதாகும்.இந்த உண்மையை நாம் கூறினால் நம்மை பைத்தியக்காரன் என்று கலியுகத்தில் சிரிக்கும் சுயநலம் எண்ணம் கொண்ட மூடர்களே அதிகம்.நகை வாங்குவதினால் வாங்குபவர்களுக்கு எந்த பயனும் இல்லை விற்பவர்களுக்கு தான் லாபம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.