அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் M. பிரதாப் IAS
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்கே பேட்டை அருகில் மகான் காளிகாபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு அரசு பேருந்து திருத்தணி நோக்கி சென்றது. அப்போது கேஜிஎன் கண்டிகை அருகே வரும்போது கல்குவாரியிலிருந்து டிப்பர் லாரி ஜல்லிகற்கள்த ஏற்றி கொண்டு வந்தது. அப்போது அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் லாரி டிரைவர் குடி போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐந்து பேர் மரணம் அடைந்த செய்தி கேட்டவுடன் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட பகுதி மக்களிடம் விசாரித்த போது பகல் நேரங்களில் நூற்றுக்கணக்கான லாரிகள் ஜல்லிகற்களை ஏற்றுக் கொண்டு மிக வேகமாக செல்கிறது. மேலும் தார்ப்பாயும் கட்டுவதில்லை. அதே போல சவுடு மன், மணல் குவாரிகளில் இருந்தும் மணல்கள் கடத்தப்படுகிறது. அந்த மணல் லாரிகள் முறையாக தார்பாய் கட்டாமல் செல்வதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. அடிக்கடி சாலை விபத்துகள் நடை பெறுகிறது என்று தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் அரசு பேருந்து மிகப் பழைய பேருந்தாக இருந்ததினால் நேருக்கு நேர் மோதியதில் பேருந்து சுக்குநூறூக உடைந்து பெரும் சேதம் அடைந்தது. எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மண் குவாரிகளில் இருந்து மண் கடத்தப்படுகிறது. ஜல்லி கற்களும் கடத்தப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பகல் நேரங்களில் குறிப்பாக அரசு அலுவலக நேரங்களில் பெரிய கனரக வாகனங்களை நகர் மற்றும் பள்ளி கிராமப்புற பகுதியில் வாகனங்களை நுழைய தடை விதிக்க வேண்டும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.
திருவள்ளூர் நகரத்தில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக தொடர்ந்து 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் மண் கடத்தப்படுகிறது. ஆனால் அந்த மண் தனியாருக்கு விற்கப்படுகிறது. எனவே அரசு தீவிர ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். சாலை விபத்துக்கள் நடைபெறால் பார்த்துகொள்ளவேண்டும் என்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அதிகமாக உயர்த்தி வழங்கவேண்டும். அதே போல அவர்களக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்கின்றனர் விபத்தல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.