chennireporters.com

திவான் பகதூர் சமூக போராளி ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்க சிந்தனையாளர் திராவிட இயக்கத்தின் முன்னோடி இதழியல் போராளி தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு தமிழில் கையெழுத்து கையெழுத்தை கற்றுத் தந்தவர்.

லண்டன் வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு பல சேர்த்தவர் விலிம்பு நிலை மக்கள் பொது வீதிகளில் நடக்கலாம் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம் செருப்பு அணிந்து நடக்கலாம் என்று குடியுரிமை சட்டத்தை வெள்ளை அரசிடம் செப்பு பட்டயத்தில் பெற்று தந்தவர்.

இந்து மதத்தின் சாதி கொடுமைகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர் தமிழகத்தின் மேலவை உறுப்பினர் ராவ் பகதூர் மற்றும் ராகி பட்டம் பெற்றவர்.

சமத்துவ போராளி ஐயா மாவீரன் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செம்மாந்த வீரவணக்கம் என்று விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக 1859 ஆம் ஆண்டு பிறந்த விடுதலை சூரியன் ஆதி தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் பறையர் மகாசன சபையை தோற்றுவித்தவர்.

தனது 86 வது வயதுவரை தன் சமூகத்திற்காக போராடியவர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று…

ரெட்டை மலை சீனிவாசன் பழைய செங்கற் பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் என்ற சிறிய கிராமத்தில் இரட்டைமலை என்பவருக்கு மகனாக பிறந்தார்.

தெய்வ பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்கு சீனிவாசன் என பெயரிட்டனர்.

தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் இன்ஷியலுக்கு பதிலாக தந்தையின் முழு பெயரையும் சேர்த்து எழுதிய காரணத்தினால் இரட்டைமலை சீனிவாசன் என்று மாற்றப்பட்டது.

இதையும் படிங்க.!