Chennai Reporters

வாழும் வரலாறு காமராஜர் பிறந்த நாள் இன்று.

கல்வித்தந்தை காமராஜரின் பிறந்த தினம் இன்று,
கல்வி வளர்ச்சி தினமாக, கடைபிடிக்கப்படுகிறது.

 

தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி,  இவர் விருதுநகரில் பிறந்தார்.

1936ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1946-52ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

இவர் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்,கர்மவீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் கருப்பு காந்தி
என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் வழிகாட்டி என்று பாராட்டியுள்ளார்.

 

பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர். 1975ஆம் ஆண்டு மறைந்தார். மறைவுக்குபின் 1976ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!