chennireporters.com

நாளை உதிக்கிறது “உதயநிதி” எனும் இளைய சூரியன்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி தமிழக அமைச்சரவையில் நாளை அமைச்சராக முடிசூட போகிறார்.  இவர் தற்போது சேப்பாக்கம்,  திருவல்லிக்கேணி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பு படித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். இவரது மனைவி பெயர் கிருத்திகா. இவருக்கு ஒரு இன்பன் என்கிற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர். இவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் சிறப்பாக பணியாற்றுகிற காரணத்தினால் இவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு முதலில் வலியுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்,  உதயநிதி அமைச்சராகும் தகுதி இருக்கிறது என்று வலியுறுத்தினார். இந்நிலையில்  உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை நாளை ஏற்க உள்ளார்.

இவரின் கழகப் பணி மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் தன்னுடைய அமைச்சர் அவையில் உதயநிதியை இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்படும் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றுவார் மக்களின் மனங்களை வெல்வார் என்றே சொல்கிறார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்.

 

அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வரும் இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், கல்வி அமைச்சருமான அன்பில் மகேஷ் 30 ஆண்டுகாலம் கழித்து அமைச்சர் பதவி கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உடன்பிறப்புகளோ உதயநிதி அமைச்சராவதில் எல்லோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். “உதயநிதி” எனும்  இளைய சூரியன் நாளை  உதிக்கிறது என்றே சொல்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.

இதையும் படிங்க.!