உதயநிதி ஸ்டாலின் இன்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவரது உறவினர்களிடம் வாழ்த்து பெற்றார். பின்னர் பதவியேற்பு முடிந்த பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வரத்தான் செய்யும் நான் சிறப்பாக பணியாற்றுவேன் என்று பதில் அளித்தார்.
அதன் பின்னர் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் தலைமைச் செயலகத்திற்கு சென்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மேலும் தமிழகத்தில் 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சராக இருற்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சி.வி.மெய்யநாதனுக்கு சூற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாடு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, அமைச்சர் முத்துசாமி வசம் இருந்த சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கைத்தறி துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.