chennireporters.com

பதவி வேண்டுமா? படுக்கைக்கு வா! திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் அடாவடி.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுகவிற்கு பொல்லாத காலமாக இருக்கிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்களை படுக்கைக்கு வந்தால் பதவி தருவேன் என்று மகளிர் அணியினரை இரட்டை அர்த்தத்தில் பேசி இழிவு படுத்துகிறார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருத்தணி ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தவர் பிரியதர்ஷினி என்கிற பிரியா இவர் தற்போது எந்த பதவியும் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது திருத்தணி திமுகவினரின் வயிறு கலங்கியுள்ளது.

பிரியதர்ஷினி  திமுகவில் 30 வருடங்களாக உறுப்பினராக  இருந்து வருகிறார் அது தவிர திருத்தணி ஒன்றிய மகளிர் அணி பொறுப்பில் 10 ஆண்டுகளும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட த்தில் மகளிர் தொண்டரணி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரியாவிற்கு எந்த பதிவியும் வழங்காமல் ஓரங்கட்டி வைத்துள்ளார் மாவட்ட செயலாளரும் திருத்தணி திமுக எம்.எல்.ஏ.வுமான சந்திரன்.

திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார். திருத்தணி மேற்கு மாவட்ட மகளிர் அணியில் உள்ள அத்தனைப் பெண்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் அவர்களில் அழகாக இருப்பவர்களை எல்லாம் அவர்களை தனி,தனியாக வந்து என்னை சந்திக்க வேண்டும், நீயும் வந்து நான் சொல்வதைக் கேட்டு நடந்தால்  அதாவது என்னுடன் படுத்தால் உனக்கு பதவி வழங்குவேன் இல்லையென்றால் உன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விடுவேன் என்று பிரியாவை மிரட்டியதாக பிரியா முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக கட்சியை உயிராகவும் மூச்சாகவும் நினைத்து கழகப் பணியாற்றி வரும் எனக்கு கழக பொறுப்பு வழங்காமல் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் நான் அவருடன் படுக்க மறுத்ததால் தான் என்பதை பகிங்கரமாக  சொல்லி இருக்கிறார்

மேலும் பிரியா  வெளியிட்டுள்ள வீடியோவில் அதிமுகவை சார்ந்தவர்களுக்கும் டிடிவி கட்சியை சார்ந்தவர்களுக்கும் சந்திரன்  பணம் பெற்றுக்கொண்டு பதவி வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக கட்சியின் தலைமைக்கு ஏற்கனவே புகார் அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரியா அந்த புகாரியின் மீது கட்சி தலைமை  என்னையும் அவரையும் நேரில் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

அது தவிர தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அவரது அடியாட்களை வைத்து என்னை செல்போனில் மிரட்டுவார். பூனை செய்கிற குசும்பு வேலைகளை அதிகம் செய்வார் எனவே என் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்று பேசி பதர வைத்துள்ளார் பிரியா .

பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய ஒரு மாவட்ட செயலாளரே மகளிர் அணியினரை படுக்கைக்கு அழைப்பது எந்த வகையில் நியாயம் நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள் இல்லை.  இவர் யாருடைய பின் பின்புலத்தால் இவர் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை. மேலும் மாவட்ட செயலாளர் சந்திரன் சொல்லவே கூசும் அருவருக்கத்தக்க வகையில் பேசிய பேச்சுக்களை வீடியோவில் சொல்ல முடியாது என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரியா.

இந்திய வின்வெளி விஞ்ஞானிகள் நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு சந்திராயன் மூன்று விண்கலத்தை நிலாவுக்கு அனுப்பி ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரனோ தனது மாவட்டத்தில் உள்ள மகளிர் அணியினர் இடத்தில் என்ன சிறப்புகள் எல்லாம் இருக்கிறது என்பதை படுக்கைக்கு வரவழைத்து ஆராய்ச்சி செய்ய இருக்கிறார் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் திருத்தணி திமுக உடன்பிறப்புகள்.

இதையும் படிங்க.!