chennireporters.com

மகளுக்காக நீதி கேட்டு போராடும் போலீஸ் ஏட்டு நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் .

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமை காவலர் ஒருவர் சென்னை தலைமைச் செயலகம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தனது காலை இழந்த மூன்றாம் வகுப்பு மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கோதண்டபாணி. இவர் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் பிரதிக்க்ஷா ஆவடியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பிரதிக்க்ஷா கடந்த 2021 ஆம் ஆண்டு கால் அரிப்பு காரணமாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  சென்றுள்ளார்.

 

என் மகளை முழுமையாக பரிசோதிக்காமல் மூன்று முறைக்கு மேல் தவறான மருந்துகள் ஏற்றப்பட்டு வலது காலை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.  மூளைக்காய்ச்சல் இல்லாமல் மூளை காய்ச்சலுக்கான மருந்து என் மகளுக்கு செலுத்தினார்கள்.

இது தொடர்பாக கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்தில் என் மகளின் ரத்த மாதிரி பரிசோதித்த பிறகு அவருக்கு மூளைக்காய்ச்சல் நோய் இல்லாமலே மருந்து ஏற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

அது தவிர எனக்கு தெரியாமல் டாக்டர்கள் ஐந்து முறை என் மகளுக்கு டயாலிசிஸ் செய்திருக்கிறார்கள். அவளுக்கு தலைமுடி உதிர்ந்து கொண்டிருக்கிறது 66 நாட்கள் சிகிச்சையில் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கிறாள் எனது மகளை சரி செய்து தர முடியவில்லை என்றால் இந்திய ஜனாதிபதி இடம் சிபாரிசு பெற்று தமிழக முதல்வர் ஐயா அவர்கள் என்னையும் எனது மகளையும் கருணை கொலை செய்து விடுங்கள் என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் தலைமை காவலர் கோதண்டபாணி.

டாக்டர்களின் தவறான சிகிச்சையால் என் மகளுக்கு உடலில் உபாதைகள் அதிகமாகி வலது கால் கருகிய நிலைக்கு போய்விட்டது அதனால் எனது மகளுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வர ஆரம்பித்தது மூளைக்காய்ச்சல் அறிகுறியே இல்லாமல் மூளை காய்ச்சலுக்கான மருந்தை என் மகளின் உடலில் ஏற்றினார்கள்.

இதனால் உடலில் ரத்தம் கட்டிக் கொண்டே போனது. அதன் பிறகு இவர்களால் தனது மகளை காற்றை காப்பாற்ற முடியாது என்று கருதி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தனது குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் தலைமை காவலர் கோதண்டபாணி.

இது குறித்து தமிழக முதலமைச்சர், அரசு அதிகாரிகள், காவல்புறை அதிகாரிகள் அனைவருக்கும்  முறைப்படி கடிதம்  எழுதியிருக்கிறார்  கோதண்டபாணி. ஆனால் ஒன்றை ஆண்டுகள் ஆகியும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை அந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதன் பிறகு சட்டப்படி நீதிமன்றத்தை நாடி தனக்கான நீதியைப் பெறுவேன் என்கிறார் கோதண்டபாணி. தன் மகளின் இந்த செயலுக்கு நீதி  கிடைக்குமென்று ஒன்றை ஆண்டுகளாக காத்திருந்தார்.

ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இதனால் தலைமைச்செயலகம் முன்பு  தன் மகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். ஆனால் அவரை போராட்டம் நடத்தவிடாமல் போலீஸ் அதிகாரிகள் அவரை மிரட்டி வெளியேற்றினார்கள். ”போலீஸ் உடையில் நீ எப்படி போராட்டம் நடத்தலாம்” என்று  திட்டினார்கள்.

அவரை ஓரமாக போ என்று ஒருமையில் பேசினார்கள் ”காக்கி சட்டை அணிந்திருந்த மனிதாபிமானம் இல்லாத  மிருகங்கள்”.  அவர்களுக்கு பெயர் உயர் போலீஸ் அதிகாரிகள். இதைப்பார்த்த பொதுமக்கள் போலீஸ்காரருக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களின் நிலை கேள்விக்குறிதான் என்று முனு,முனுத்துக்கொண்டே சென்றனர். 

கருணை உள்ளம் கொண்ட முதலமைச்சர் தன் மகளுக்காக நீதி கேட்டு போராடும் போலீஸ் ஏட்டுவிற்கு உதவி செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோதண்டபாணிக்கு ஆதரவாக பொதுமக்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் டீன் எழிலரசி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

இதையும் படிங்க.!