பல்வேறு அமைப்பினர் பாராட்டு
அமெரிக்காவில் வசிக்கும் கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி ஏற்பாட்டில் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 1 கோடியில் ஆக்சிஜன் கட்டமைப்பு பணி செய்யப்பட்டு உள்ளது.
டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி 48 மணி நேரத்தில் ரூபாய் ஒரு கோடி நிதி திரட்டி கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கட்டமைப்பை ஏற்படுத்தி தந்துள்ளார்.
இவருடைய சொந்த ஊர் காரமடை அருகே உள்ள மங்கல கரைப்புதூர்.
தற்போது அமெரிக்காவில் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.
இவரது சேவையை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகின்றனர்.