இந்தோனேசியாவில் நிடுநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிளிட்டர் மாவட்டத்தில் 57 கி.மீ. தொலைவிலும், கடற்பரப்பின் கீழ் 110 கி.மீ. ஆழத்திலும் 6.2 ரிக்டன் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பெரிய அளவில் இல்லாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
பிளிடடர் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலியின் குட்டா, டென்பசார், கியானார் மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்திலும் இந்த அதிர்ச்சி உணரப்பட்டது.