chennireporters.com

கரூர் மாணவி தற்கொலை புகாரை விசாரிக்க மறுத்த இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்.

கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து.

கரூரை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து அவர் தனது நோட்டில் தற்கொலைக்கான காரணத்தையும் எழுதி வைத்துள்ளார்.அதில் தான் பாலியல் வன் கொடுமையால் தான் பாதிக்கப்பட்ட
தாகவும் என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்தது யார் என்பதை கூட எழுத எனக்கு தைரியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாலியல் வன் கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாகத் தான் இருக்க வேண்டும் எனக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்கு ஆசையாக இருக்கிறது ஆனால் முடியவில்லை.

நான் பெரியவளாகி நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருக்கிறது.இருந்தாலும் நான் எல்லோரையும் விட்டு போகிறேன்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் நான் இந்த உலகை விட்டே போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

தன்னுடைய புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுக்க வந்த மாணவியின் தாயாரையும் அவரது உறவினர்களையும் ஆபாசமான வார்த்தைகளில் பேசியிருக்கிறார்.கேள்வி கேட்டவர்களை கடுமையாக தாக்கியிருக்கிறார் .

இரவு புகார் கொடுக்கச் சென்ற அவர்களை இரவு முழுவதும் வீட்டுக்கு போக விடாமல் காவல் நிலையத்திலேயே விசாரணை என்ற பெயரில் காலை வரை வைத்திருந்ததாக கூறுகின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பெண்களை மாலை 6 மணிக்கு மேல் காவல் நிலையத்தில் விசாரிக்க கூடாது என்று சட்டம் இருக்கிறது.இருப்பினும் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் உள் நோக்கத்தோடு அவர்களை திட்டி அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் புகார் கொடுக்க சென்றவர்களின் புகாரை வாங்காமலும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அடித்து உதைத்தது தொடர்பாக இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.

தனது மகளின் மரணம் குறித்து அவரது தாய் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .

இந்த நிலையில்தான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

கரூர் மாணவியின் இறப்புக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அது தவிர பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க.!