chennireporters.com

#inspector rajarajeshwari; பிரேக் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு.

திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1லட்சத்து 46 ஆயிரம் ம ரூபாய் பறிமுதல் செய்பட்டது. பிரேக் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து லஞ்ண ஒழிப்புத்துறை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ததில் கணக்கில் வராத, ரூ1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருங்குளம் கூட்டுச் சாலை அருகில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கும்மிடிப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்துக்கு வந்து, புதிய ஓட்டுநர் உரிமம், புதுப்பித்தல், வாகனங்களுக்கு பர்மிட் வழங்குதல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

ராஜராஜேஸ்வரி

மோட்டார் வாகன அலுவலகத்தில் முறைகேடு மற்றும் அதிகளவில் பணம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் ராஜராஜேஸ்வரி திருத்தணி அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், மாலை 4 மணிக்கு திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி, ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வி, மாலா மற்றும் போலீஸார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையில் கணக்கில் வராத, ரூ.1.46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம். ~திருத்தணி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா்.

 

இந்த சோதனையின் போது மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி யிடம் துருவி துருவி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர மேலும்  அவரது ஓட்டுநர் பிரகாஷ், மற்றும் முக்கிய புரோகர் பரணி ஆகியோரிடத்தில் போலீசார்  5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.  இவர்களிடத்தில் இருந்து தான்     லஞ்சமாக பெறப்பட்ட ரூபாய் 1.46 லட்சம் பணம் மற்றும், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினார்கள்,

இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி சோதனை என்பது அலுவலகத்திலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட இடைத்தார்கள் அவர்களிடமும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர் விசாரணை மேற்கொண்டனர்

மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி அவரது ஓட்டுநர் பிரகாஷ்

அவர்களிடத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களை வெளியே அனுப்பினார்கள். இதே போல் மோட்டார் வாகன அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்ட பிறகு இவர்கள் வீடுகளுக்கு அனுப்பினார்கள்.

 

இந்த லஞ்ச ஒழிப்புத் துறையில் சோதனை என்பது மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி அவரது ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் இடைத்தரகர் பரணி ஆகியோரிடத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது இதனை கைப்பற்றி இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்களிடம் கையெழுத்து  பெற்றுக்கொண்டு  விசாரணைக்கு ஆஜராகும் படி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி ராமச்சந்திர மூர்த்தி சம்மன் வழங்கினார்.

லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி சோதனையினால் திருத்தணியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரேக் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வதியின் ஓட்டுநர் பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தினால் ராஜராஜேஸ்வரியின் சொத்து பட்டியல் அவர் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சொத்து வாங்கி வைத்திருக்கிறார் எத்தனை வங்கி கணக்குகள் இருக்கிறது என்கிற தகவல் வெளியாகும் என்கின்றனர் திருத்தணி ஆர் டி ஓ அலுவலக புரோக்கர்கள்.

இந்தியன் படத்தில் வருவதைப் போல எந்த கையெழுத்து ஆக இருந்தாலும் காசு வாங்காமல் போட மாட்டாராம் ராஜராஜேஸ்வரி. செலான் இல்லாத பைலை பார்த்தால் கடுமையான வார்த்தைகளில் பேசி பைலை தூக்கி எறிவாராம் ராஜராஜேஸ்வரி. இவரின் சொத்து மதிப்பு மட்டும் சில பல கோடிகளைத் தாண்டும் என்கின்றனர் புரோக்கர்கள்.

இதையும் படிங்க.!