விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் மகேந்திரா இவர் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி யில் பி.எஸ்.சி. இரண்டாம் படித்து வருகிறார்.
கல்லூரி மாணவர் மகேந்திரா காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழ் கேட்டு விழுப்புரம் கலெக்டர் மோகனிடத்தில் மனு கொடுத்துள்ளார்.
கலெக்டர் ஆர்.டி.ஓவை நேரில் அழைத்து மாணவர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.நேற்று முன்தினம் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதிச்சான்றிதழிற்காக காத்திருந்தார்.
இந்நிலையில் இரவு நேரம் வரை அவர் ஆர்.டி.ஓ ஆபிசில் காத்திருந்தார்.ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை.இதனால் கோபமடைந்த மாணவன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் தனி நபராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காட்டுநாயக்கன் சாதிச் சான்றிதழ் கேட்டு போராட்டம் நடத்திய மாணவனை சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதி மாணவனை அடித்து தரதரவென இழுத்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதை பார்த்த விழுப்புரம் டி.ஐ.ஜி. இன்ஸ்பெக்டர் கனபதியை சஸ்பெண்ட செய்து டி.ஐ.ஜி பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.