chennireporters.com

#Inspector taking commission from transgenders; திருநங்கைகளிடம் கமிஷன் வாங்கும் போலிசார். கவனிப்பாரா கமிஷனர் அருண்???

சென்னை மாநகர காவல் துறையில் அதிக அளவில் கல்லாக்கட்டும் காவல் நிலையங்களில் ஒன்று மதுரவாயில். மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட டீக்கடைகள், 700க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள், முப்பதுக்கு மேற்பட்ட பிராந்தி கடைகள், நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள், நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இது தவிர சென்னை கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள், லாரிகள், கூட்ஸ் வண்டிகள் அனைத்தும் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பைபாஸ் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

Armstrong issue; law and order, controlling rowdies will be priorities": A  Arun after taking charge as Police Commissioner of Chennai

கமிஷனர் அருண்.

ஒரு மாதத்திற்கு மதுரவாயில் காவல் நிலையத்தின் மொத்த வருவாய் 20 லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது. அதாவது ஒரு டீக்கடை ஒன்றுக்கு மாதம் 2000 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது. மதுரவாயல் காவல் நிலையத்திற்கு கப்பம் கட்ட வேண்டும். தள்ளுவண்டி கடைகள் மாதம் 2000 ரூபாய் கடை ஒன்றுக்கு கட்ட வேண்டும். பெட்டிக்கடைகள் மாதம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை கட்ட வேண்டும். இரவு நேர டீக்கடைகள் மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை கப்பம் கட்ட வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் விடுதிகள், விபச்சார விடுதிகள், தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றும் தங்களது வருமானத்திற்கு ஏற்ற மாதிரி கப்பம் கட்ட வேண்டும் இல்லை என்றால்  அங்கு தொழில் நடத்த இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா அனுமதிக்க மாட்டார்.chennai murder of her son in maduravoyal, Tirupam's mother beat her son to  death with an iron rod | Chennai : மகனை அடித்துக் கொன்ற தாய்...! சென்னையில்  நடந்தேறிய பகர் சம்பவம்..! காரணம் என்ன ?இது தவிர அரசு டாஸ்மாக் கடைகள் 10 மணிக்கு மேல் கள்ளத்தனமாக மதுவிற்கும் பார்களில் மாதம் ஒன்றிற்கு பத்தாயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை தர வேண்டும். அது தவிர தனக்கு வேண்டப்பட்ட நேரங்களில் பீர் முதல் உயர் ரக சரக்கு வரை ஓசியில் வாங்குவார்கள்.

சென்னை மாநகரத்தில் இருந்து மதுரவாயில் டோல்கேட் வழியாக செல்லும் மக்கள் நெருக்கடி நிறைந்த இடத்தில் அழகிய இளம் பெண்களும், அழகிய திருநங்கைகளும் தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக இரவு நேர அழகிகள் சாலையோரங்களில் நின்று தங்களது வியாபாரத்தை தொடங்குவார்கள். இப்படி வயிற்றுப் பிழைப்புக்காக தங்களது உடலை விற்று பிழைக்கும் திருநங்கைகளிடம் வெட்கம் இல்லாமல் காவல்துறையின் காக்கி சட்டைக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக விதமாக கூச்சம் இல்லாமல் அந்த திருநங்கைகளிடமும் லஞ்சம் வாங்குகிறார்கள் மதுரவாயல் போலீசார்.

 

நிலவின் பெயர் கொண்ட அழகிய ரோஜாவைப்போல தங்க சிலை போல மின்னும் ஒரு திருநங்கை ஒருவர் நம்மிடம் மதுரவாயல் காவல் நிலைய போலீசார் என்னிடம் பிச்சை காசு வாங்காதவர்களே இல்லை என்கிறார். உடலை விற்று பிழைக்கும் எங்களிடமும் கைநீட்டி பிச்சை எடுக்கும் இந்த காவல்துறையினர் நாண்டுகிட்டு சாகலாம் என்கிறார் அந்த அர்த்தநாரி. இதைத் தவிர மதுரவாயில் டோல் கட்டு வழியாக செல்லும் பார்சல் லாரிகள் கனரக வாகனங்கள் டாக்ஸி வண்டிகள் என ஒவ்வொரு வண்டிகளிடமும் வசூல் வேட்டை. தினம் ,தினம், வசூல் வேட்டை லஞ்சப் பணத்தில் குளித்து வசூல் வேட்டையில் தின்று ஓசியில் குடித்து குடும்பம் நடத்துவதே மதுரவாயல் போலீசின் தினசரி வேலை என்கின்றனர் அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள்.

Junior Vikatan - 03 April 2022 - ஜூனியர் வாக்கி டாக்கி |  junior-walkie-talkie-police-atrocities - Vikatan

இந்த நிலையில் ரோந்து போலீசார் எனப்படும் ஹைவே பேட்ரோல் போலீசார் வசூல் வேட்டை தனி. அது இந்த கணக்கில் வராது. மதுரவாயல் போலீசாரின் தினசரி வசூல் வேட்டை பற்றியும் வார வசூல் மாத வசூல் பற்றி எழுதத் தொடங்கினால் டிவி சீரியலின் மெகா தொடர் போல நீண்டு கொண்டே போகும் என்கிறார்கள் அந்தப் பகுதி வியாபாரிகள் சில தொழில் நடத்தும் முதலாளிகள். பூபதி ராஜா தன்னை சினிமா படத்தில் வரும் போலீசை போலவே காட்டிக் கொள்வார் என்கிறார்கள். அந்த காவல் நிலையத்தில் உள்ள சில போலீசார். விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் கட்டிங் இன்ஸ்பெக்டரை போலவே நடந்து கொள்வாராம் பூபதி ராஜா. பூபதி ராஜாவின் தில்லாலங்கடி வேலைகளை கமிஷனர் அருண் கவனிப்பாரா என்கிறார்கள் உளவுத்துறை போலீசார்.

🚨 Vanagaram toll plaza on Chennai bypass to be removed, new one to come up  at Thiruneermalai Due to urbanization near Vanagaram, there were demands to  remove the toll plaza. A new

கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் பூபதி ராஜாவின் செயல்களை அதிரடியாக கண்காணித்து அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள். சில உளவுத்துறை அதிகாரிகள். திரும்பிய இடமெல்லாம் லஞ்சம் போகிற இடமெல்லாம் ஓசி டீ காபி கூல்ட்ரிங்ஸ் எல்லாம் போசி தான் ஓசி என்றால் மதுரவாயில் போலீசார். மதுரவாயல் போலீஸ் என்றால் ஓசி என்கிறார்கள் சில ஆட்டோ ஓட்டுநர்கள். எது எப்படியோ காக்கி சட்டை அணிந்து கொண்டு லஞ்சம் வாங்குவதோ அல்லது கல்லா கட்டுவதோ அல்லது கடைக்காரர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது இல்லை பிச்சை எடுப்பது மாமூலான ஒன்று தான் என்று சொல்லலாம் . ஆனால் திருநங்கைகளாக இருக்கும் நபர்களிடம் கூட கைநீட்டி காசு வாங்கும் மதுரவாயில் போலீசாரை என்னவென்று சொல்வது வாசகர்களே நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கமிஷனர் அருண் இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வை கவனிப்பாரா இல்லை கடந்து செல்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நமது அலுவலகத்திற்கு வந்த புகாரியின் அடிப்படையில் நாம் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். விசாரணையில் நாம் எழுதியுள்ள செய்திகள் அனைத்தும் உண்மை என தெரிய வருகிறது. இந்த செய்தி குறித்து மதுரவாயல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா மற்றும் அந்த காவல் நிலைய அதிகாரிகள் யாராவது தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!