மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியக்கட்டணம் 30% வரை உயர்த்தப்படுவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தமாக செலுத்தப்படும் பிரீமியமும் உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்சூரன்ஸ் ஒழுங்காற்று ஆணையமும், மத்திய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகமும், கலந்து ஆலோசித்து இந்த பிரிமியக் கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளன.
கல்வி நிறுவன பேருந்துகள், வேன்களுக்கு பிரீமியத்தில் 15% தள்ளுபடி உண்டு 150சிசிக்கு மேல் உள்ள 2 சக்கர வாகனங்கள் – 15% உயர்வு, 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்கள் – 6% உயர்வு, 1000சிசி புதிய தனியார் கார்- 23% கூடுதல், 1000-1500 சிசி வரையிலான புதிய தனியார் கார் ஒராண்டு 11% கூடுதல், 1500சிசிக்கு.
கீழ் உள்ள காருக்கு பிரீமியம் குறைவு, கல்வி நிறுவன வாகனங்களுக்கு 15% தள்ளுபடி, புதிய இரு சக்கர வாகனங்களுக்கு 17% உயர்வு, 75 சிசிக்கு குறைவான இரு சக்கர வாகனங்களுக்கு பிரீமியம் 175% உயர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.