கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உளவுத்துறை அதிகாரிகள் குறட்டை விட்டதாலே இந்த மிகப்பெரிய உயிரிழப்பு நடந்ததுள்ளது என்கின்றனர் எதிர்கட்சியினர். உளவுத்துறை செயலிழந்து விட்ட நிலையில் தங்களை காப்பாற்றிக்கொள்ள தவறு செய்த கள்ளகுறிச்சி டவுன் டி.எஸ்.பி தேவராஜ் மற்றும் கள்ளகுறிச்சி எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி போலிசார் பலரை தப்பவைத்து விட்டு சம்பந்தமே இல்லாத பல அதிகாரிகளை பலிகடா ஆக்கியுள்ளனர் உளவுத்துறை அதிகாரிகள்.
உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சண்முகம் அவர் மாவட்டம் உருவானதற்கு பிறகு எஸ்பி இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். இவர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் ஏ.வா. வேலுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று சொல்கின்றனர் உள்ளூர் காக்கிகள். அமைச்சர் மற்றும் உயர் போலிஸ் அதிகாரிகளின் பெயர் சொல்லி அந்த பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு மிகப்பெரிய சொகுசு வீடு கட்டி வருவதாகவும் கள்ளச்சாராய விவகாரத்தில் மாதம் ஒன்றிற்கு அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக சொல்லுகின்றனர்.
ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால்.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் மாவட்டத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகள் தனி நோட்டாக போட்டு எஸ்பிசிஐடியில் உள்ள எஸ்.பி. கார்த்திக் அவர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் எஸ்.பி. கார்த்தி சம்பந்தப்பட்ட சண்முகத்தின் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் ஐ.ஜி. உளவுத்துறை செந்தில்வேலனுக்கும் நோட்டு போடாமல் மறைத்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்கின்றனர் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகள். அதே போல கள்ளக்குறிச்சி டவுன் டிஎஸ்பியாக உள்ள தேவராஜ் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டிஐஜி திசா மிட்டல்.
மாவட்டத்தின் டி.ஐ.ஜி.யாக இருக்கிற திஷா மிட்டல் மீதும், ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மீதும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு காரணம் என்ன? சம்பந்தமே இல்லாமல் மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மீது நடவடிக்கை எடுத்த அரசு சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பு அதிகாரியாகிய பணியாற்றிய வரும் திஷா மீட்டல் மீதும் ஐ.ஜி. நரேந்திரன் நாயர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போனதற்கு காரணம் என்ன யார் காரணம் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் தொடர்பாக பல முக்கிய கோப்புகள் டிஐஜிக்கும் ஐஜிக்கும் அனுப்பப்பட்டதாக சொல்லுகின்றனர் சில உளவுத்துறை அதிகாரிகள்.
ஐ.ஜி.நரேந்திரன் நாயர்.
திட்டமிட்டு முதல்வருக்கு முக்கிய தகவல்களை வழங்காமல் உளவுத்துறை அதிகாரிகள் கோப்புகளை மறைத்து வைத்ததற்கான காரணம் என்ன யாருடைய தலையீட்டின் காரணமாக அந்த கோப்புகள் மறைத்து வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்புகின்றனர் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்.
35 ஆண்டு காலமாக சாராயம் விற்று வரும் கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் மீது ஒரு முறை கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்? அந்த பகுதியில் ஒருவரை மட்டும் சாராயம் விற்க அதிகாரிகள் அனுமதித்த்து ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
அமைச்சர் ஏவா வேலு.
ஓ சி ஐ யூ எனப்படும் ஆர்கனைஸ்ட் கிரைம் இன்விஸ்டிகேஷன் யூனிட்டிலும் பல முக்கிய தகவல்களை எஸ்பி சரவணன் மற்றும் கார்த்திக் இருவருக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலனுக்கு அந்த முக்கிய கோப்புகளை காட்டாமல் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அது போன்ற சம்பவம் நடந்துள்ளதா என்பதை எளவுத்துறை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.
ரிசர்வ் வங்கியில் பணியாற்றி காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குரூப் ஒன் தேர்வு எழுதி பணிக்கு சேர்ந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் மிக நேர்மையானவர் என்று பெயர் பெற்றவர் என்று அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி பல செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டவுன் டிஎஸ்பி தேவராஜ் மற்றும் எஸ்பி இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரிச்வந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன்.
அது தவிர உள்ளூர் சப் டிவிஷனின் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அதாவது தனிப்பிரிவு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு காரணம் என்ன ஒவ்வொருவரும் பல ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை ஏன் தொடர்ந்து அங்கு பணியாற்ற அனுமதி அளிக்கிறார்கள். அனுமதி அளித்ததற்கான காரணம் என்ன யார் அனுமதி அளித்தது.
முதலமைச்சர்.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதைப் போல உள்ளூர் டிஎஸ்பி தேவராஜ் பணி நீக்கம் செய்ய திராணியற்ற அதிகாரிகள் அமைச்சர் வேலுவுக்கு ஜால்ரா தட்டும் சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்கிய அதிகாரிகள் நேர்மையாக இருக்கும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? ஏனென்றால் நேர்மையாக இருக்கும் சில அதிகாரிகள் இவர்களுக்கு கப்பம் கட்ட வில்லை என்பது நிதர்சனமான உண்மை. தாங்கள் ஏற்கனவே சொன்ன பல சிபாரிசு விஷயங்களுக்கு தலை சாய்க்காத செவி சாய்க்காத அதிகாரிகளை இந்த கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் அதிகாரிகள் பலிக்கடா செய்துவிட்டனர் என்பது தான் மறுக்க முடியாத உண்மை என்கின்றனர் சில உள்ளூர் காக்கிகள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் சென்னையில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளான எஸ்.பி. சரவணன் மற்றும் எஸ்.பி. கார்த்திக் அவர்களுக்கு மாதந்தோறும் கப்பம் கட்டிய வருவதாக காலர் தூக்கி விட்டு உள்ளூரில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பல பொய்களைப் பேசி சென்னையில் தனக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்று மார் தட்டி வருகிறார் எஸ்பி இன்ஸ்பெக்டர் சண்முகம். உண்மையிலேயே உளவுத்துறை அதிகாரிகளான சரவணன் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மாதந்தோறும் மாமுல் கொடுக்கிறாரா என்பதை அவர்கள் தான் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராய விஷயத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பலர் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க வைத்து விட்டனர். காரணம் சாதி ஒரு பக்கம் லஞ்சம் ஒரு பக்கம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. விஷ சாராயத்தில் தொடர்புடைய மரக்காணம், விழுப்புரம், ஆத்தூர், சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஏனென்று சொன்னால் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகள் விலை போய் விட்டனர் என்கிறார்கள் எதிர்கட்சியினர்.
கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜன்.
இது சம்பவம் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். ஏற்கனவே அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்திருக்கலாம். அரசாங்கத்திற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்காது என்பதை உளவுத்துறை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்திய ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ, உதயசூரியன் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைத்து பிராடுகளுக்கும் போலீசில் வக்காலத்து வாங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க விட்டதே இந்த மிகப்பெரிய உயிரிழப்புக்கு காரணம் என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.
சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன்.
சங்கராபுரத்தில் மட்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்காத ஒரு தொழிலும் இல்லை என்கின்றனர் உள்ளூர் வாசிகள். விபச்சாரம், , கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் மது என எல்லாவிதமான சட்டத்திற்கு புறம்பான வேலைகளும் அங்கு நடக்கிறது.
ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்க தொடங்கினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை செல்போனில் அடைத்து உதயசூரியன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கட்டளை இடுவார் இல்லை என்று மிரட்டுவார். இவர் இப்படி என்றால் வசந்தம் கார்த்திகேயன் அதிகாரிகளை ஒருமையில் பேசுவதும் திருடர்களுக்கும் கொள்ளை கூட்டத்தினருக்கும் வக்காலத்து வாங்கி சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்து கட்சிக்கு அவல் பெயரை ஏற்படுத்தி அவர் செய்த செயல்கள் லிஸ்டில் அடங்காது என்கிறார்கள் உடன் பிறப்புக்கள் சிலர்.
இந்த செய்தி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அவர்களது தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.