chennireporters.com

40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வானிலை ஆய்வு மையம்.

அடுத்த 24 மணி நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பலாச்சந்திரன் அறிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 100கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்ட கரையோர பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 40-45கி.மீ வேகத்தில் வீசும்.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 54% அதிகம் பொழிந்துள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 77% அதிகமாக பொழிந்துள்ளது.

இதையும் படிங்க.!