chennireporters.com

#ioc administration takes cuttings; தனியார் பஸ் முதலாளிகளிடம் கட்டிங் வாங்கும் IOC நிர்வாகம்.

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஐஓசிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்தப் பெட்ரோல் நிலையத்தில் தனியார் பேருந்துகள் நிற்கவைக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் பங்க்கா அல்லது தனியார் பேருந்து நிலையமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

அது பெட்ரோல் நிலையம் போலவே இல்லாமல் அது ஒரு பேருந்து நிறுத்தம் போலவே உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் கழிப்பிடங்கள், காபி பார், மற்றும்  ஒரு பெட்டிக்கடையும் செயல்பட்டு வருகிறது. ஐஓசி நிறுவனத்தின் அனுமதி பெற்று தான் இந்த காபிபார் பெட்டிக்கடை கழிப்பிடம் செயல்பட்டு வருகிறதா என்று நாம் விசாரித்த போது ஐஓசி நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்கின்றனர் அங்குள்ள ஆம்னி பேருந்து ஓட்டுனர்கள்.

ஆனால் அந்தப் பெட்ரோல் பங்க் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர் மேல் வாடகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பஸ் முதலாளிகள் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு நிறுவனமும் சுமார் 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அந்த பெட்ரோல் நிலையத்தை மேற்பார்வையிட்டு வரும் நிர்வாகிக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கோயம்பேடு  ஆம்னி பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள இந்த பெட்ரோல் பங்க்கால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே ஐஓசி நிர்வாகத்தினர் அந்த பெட்ரோல் பங்க்கில் பேருந்துகளை நிறுத்த அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் அங்கு செயல்பட்டு வரும் காபிபார் மற்றும் பெட்டிக்கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்கின்றனர் பயணிகள்.

அங்குள்ள சில ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் கேட்டதற்கு ஐஓசி நிர்வாகத்தினர் தனியார் பஸ் முதலாளிகளிடம் மாதம்1ம்தேதி ஆனவுடன் பிச்சை எடுக்கின்றனர். தாங்கள் பிச்சை எடுத்து வாழ்வதற்காகவே இந்த பெட்ரோல் நிலையத்தில் தனியார் பஸ்களை நிற்க அனுமதிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் காபிபார், பெட்டிக்கடை கட்டணக் கழிப்பிடங்களையும் வைக்க அனுமதித்துள்ளனர் என்கின்றனர். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் எனவே ஐஓசி நிர்வாகம் உடனடியாக அந்த பெட்ரோலை நிலத்தில் நிற்கவைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகள் காபி பார், பெட்டி கடை அப்புறப்படுத்தி அதை பெட்ரோல் பங்க்கை போல செயல்பட  அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்.

தனியார் பஸ் முதலாளிகளிடம் ஐஓசி நிர்வாகத்தினர் பிச்சை எடுப்பது நிறுத்திவிட்டு அதை பெட்ரோல் பங்க்கை போல பராமரிக்க உத்தரவிடுவார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?

ஐ ஓ சி நிர்வாகத்திற்கு ஜால்ரா தட்டும் வகையில் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் சாரும் ஒவ்வொரு தனியார் பஸ் முதலாளிகளிடம் மாதம் மாமுல் வாங்குகின்றனர்.  அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் எந்த வழக்கும் போடாமல் ஓசியில் காபி குடித்து விட்டு ஓரம்போ என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

மக்களைப் பற்றி கவலைப்படாமல் போக்குவரத்து நெரிசலை பற்றி கவலைப்படாமல் ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் உள்ள காபி பாரில் ஓசியில் காபி குடிப்பதையே போக்குவரத்து போலீசார் ஒரு வேலையாகவே வைத்துள்ளனர். ஒவ்வொரு டிரைவர் இடமும் பிச்சைக்காரர்களைப் போல 50 கொடு 100 கொடு என்று கெஞ்சாத குறையாக பிச்சை எடுப்பார்கள்..

இதையும் படிங்க.!