chennireporters.com

தமிழகத்தின் புதிய டிஜிபி ஆகிறார். சைலேந்திரபாபு!!!

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிக் காலம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைகிறது.

புதிய டி.ஜி.பி.யாக தமிழக அரசு யாரை தேர்வு செய்யப் போகிறது என்கிற கேள்வி அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது.

அந்த பதவிக்கான போட்டியில் நான்கு பெயர்கள் பரிசிலிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

டி.ஜி.பி.திரிபாதி

பதவியை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் மூன்று பேர் கொண்ட பட்டியலை மத்திய தேர்வாணையம் தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பும்.

அதில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக வருபவர்கள் முதல்வருக்கு நெருக்கமான வராகவும் எல்லா விஷயங்களையும் நினைக்கும் நேரத்தில் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு வெளிப்படையாகபேசும் ஒருவர் தான் அரசுக்கு வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் சைலேந்திரபாபுவிற்கே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த பட்டியலில் ஒருவர் பெயரை ஸ்டாலின் தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

கரன் சின்ஹா

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தின் புதிய டிஜிபி யார் என்று தெரிய வரும்.

ஆனால் சைலேந்திரபாபு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

சைலேந்திரபாபு புதிய டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக கடுமையாக இருக்கும் என்றும் ரவுடிகள் மட்டும் குண்டர்களை கொடுக்க புதிய அதிரடி உத்தரவுகளை எடுப்பார் என்று அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க.!