Chennai Reporters

அலைபேசியை அழிக்கும் ஜோக்கர் வைரஸ்:

ஜோக்கர் என்ற வைரஸ் மூலம் அலைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுவது மட்டுமின்றி அலைபேசியே செயலிழக்கும் ஆபத்து உள்ளதாக ஆன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆண்ட்ராய்டு அலைபேசிகளுக்கான பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இவற்றில் சில வைரஸ் கொண்டவையாக உள்ளன.

தற்போது ஜோக்கர் என்ற வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் அலைபேசிகளில் ஊடுருவி தகவல்களை திருடுவது தெரியவந்துள்ளது.

கோ மெசேஜஸ், ப்ரீ கேம் ஸ்கேனர், பாஸ்ட் மேஜிக் எஸ்.எம்.எஸ்., சூப்பர் மெசேஜ், எலிமென்ட் ஸ்கேனர், ட்ராவல் வால்பேப்பர் போன்ற செயலிகள் மூலம் அலைபேசிக்குள் நுழையும் ஜோக்கர் வைரஸ், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள், ஓடிபி போன்றவற்றை திருடுகிறது.

இந்த செயலிகளை பயன்படுத்துவோர் உடனடியாக அலைபேசியில் இருந்து நீக்கி விடுமாறு ‘க்யிக் ஹீல் ஆன்டிவைரஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!