கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் என்ற பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் திருவிழா நடைபெறும் அந்த விழாவில் அன்னதானமும் வழங்கப்படும் பக்தர்கள் சாப்பிட்டு எச்சில் இலையில் நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பக்தர்கள் எச்சில் இலையில் புரண்டு அங்க பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இந்த நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது.
சுமார் 10 ஆண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமல் விழா மட்டும் நடந்து வந்தது. இந்த நிலையில் எச்சில் இலைகளின் மீது பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கரூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த எச்சில் இலை மீது அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வை நடத்திக் கொள்ளலாம் என கடந்த மே மாதம் 17-ம் தேதி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.
ஜி ஆர் சுவாமிநாதன்
இதை அடுத்து மே 18-ம் தேதி அன்று நெருரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட எச்சில் இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். எச்சில் இலையில் புரண்டு உருண்டு நேர்த்திக்கடன் செய்வதை உயர்நீதிமன்றமே அங்கீகரித்ததை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களை இழிவு செய்யும் இந்த சடங்குக்கு நீதிமன்றம் எப்படி துணை போகிறது என்று மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கொளத்தூர் மணி கோவை கு. ராமகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
கோவை கு. ராமகிருஷ்ணன்
நீதித்துறையில் சர்ச்சைகளில் சிக்குவது ஜி.ஆர் சுவாமிநாதன் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல ஊர் உலகம் எல்லாம் விமர்சனம் செய்யும் கஞ்சா சங்கரின் வழக்கு விசாரணையை நீதிமன்ற வழக்கத்தை மீறி விசாரணைக்கு எடுத்து அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யலாம் என்று சொன்னவர் தான் இந்த ஜி ஆர் சுவாமிநாதன். ஏற்கனவே சவுக்கு சங்கர் குற்றவாளி என்று சூமோட்டாவாக வழக்கை விசாரணைக்கு எடுத்து அதில் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அளித்தவர்.
அதன் பிறகு சவுக்கு இணைய தளத்தில் பணியாற்றிய சட்ட கல்லூரி மாணவர் கார்த்திக் என்பவரை சவுக்கு சங்கர் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அலுவலகத்தில் ஜூனியராக பணிக்கு சேர்த்துள்ளார் அது குறித்து அவர் சவுக்கு இணையதளத்தில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையும் வெளியிட்டுள்ளார்.
கொளத்தூர் மணி
அந்தக் கட்டுரையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை புகழ்ந்து கஞ்சா சங்கர் எழுதியுள்ளார். பொதுமக்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருளுவது சரியே என ஐகோர்ட் நீதிபதி ஜி ஆர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பளித்ததை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கொண்டு சுவாமிநாதன் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. சாதி மற்றும் மத பாகுபாடு அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதியாக தொடர ஜி ஆர் சுவாமிநாதனுக்கு தகுதி இல்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2015 ஆம் ஆண்டு தலித் பாண்டியன் என்பவரின் மனதில் மீதான விசாரணையில் எச்சில் இலைகள் மீது அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடைவிதித்து உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி உள்ளனர் மேலும் கர்நாடகாவில் கே சுப்பிரமணிய என்ற கோயிலில் மற்றும் அந்த பகுதியில் உள்ள பல கோவில்களில் மட்டை ஸ்னானம் என்ற எச்சில் இலை மீது நடத்தப்பட்டு வந்த அங்கப் பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பானுமதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பையும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி எச்சில் இலைகள் மீது உருண்டு புரளுவது மத அடிப்படை உரிமை அதை தடுக்க முடியாது என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டப்படி குற்ற செயல் என்றும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக் கொண்டுள்ளனர்.