கஞ்சா ஷங்கர் வழக்கு நீதிபதி சாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பளித்து இருக்கிறார் என்று மூண்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதி சுவாமிநாதனின் அளித்த தீர்ப்பு பாரபட்சமானது என்று கஞ்சா ஷங்கர் வழக்கில் மூன்றாவது நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் இந்த தீர்ப்பு நீதித்துறையில் பேசு பொருளாக எழுந்துள்ளது.
கஞ்சா ஷங்கர் மற்றும் நீதிபதி சுவாமிநாதன்
கஞ்சா ஷங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவருடைய தாய் தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் கோண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருந்தார்கள். இதை தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு முழுமையானது அல்ல என கடந்த வியாழன் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றம்
இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கஞ்சா சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பிற்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்காமல் குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு பாரபட்சமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி சுவாமிநாதன்
மேலும் எதிர் தரப்பினருக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் இந்த வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வழக்கில் இரண்டு தரப்பினருக்கும் போதுமான வாய்ப்புகள் வழங்கிய பிறகு தான் வழக்கில் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் சட்டக் கல்லூரியின் அடிப்படை பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இரண்டு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாலேயே அரசின் விளக்கத்தை கேட்காமல் நீதிபதி சுவாமிநாதன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது என்பதே ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதை காட்டுகிறது .
அவ்வாறு அவரை சிலர் அணுகியிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் அல்லது இதுகுறித்து பொறுப்பு தலைமை நீதிபதியிடம் புகார் அளித்திருக்க வேண்டும் அல்லது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் ஆனால் நீதிபதி சுவாமிநாதன் இந்த நடைமுறைகளை கடைபிடிக்காமல் உத்தரவு பிறப்பித்தது பாரபட்சமானது என குறிப்பிட்டுள்ளார். இதை அடுத்து இந்த வழக்கை மீண்டும் இரண்டு நீதிபதிகள் கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றிய நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன்
அதிகாரம் மிக்க நபர்கள் தன்னை சந்தித்ததாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சொன்னது குறித்து ஏன் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கவில்லை. அல்லது அந்த நபர்கள் மீது சுமோட்டாவாக ஏன் வழக்கை பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்.
இதே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தான் ஏற்கனவே சூமோட்டாவாக சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கை விசாரணைக்கு எடுத்து அதில் ஒரு வருடம் சிறை தண்டனை கொடுத்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் சவுக்கு சங்கர் தனது அலுவலகத்தில் பணியாற்றிய லீகல் கரஸ்பாண்டன்ட் கார்த்திக் என்பவரை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். மேலும் கார்த்திக்கை வேலைக்கு சேர்த்து வைத்தது தொடர்பாக சவுக்கு சங்கர் தனது இணையதளத்தில் ஆங்கிலத்தில் சவுக்கு சங்கர் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். அதில் நீதிபதி சுவாமி நாதனை அவர் பாராட்டி எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.