chennireporters.com

திருந்தாத மக்கள் சக மனிதர்களை காலில் விழ வைத்த சம்பவம் கமல் டென்ஷன்.

kamal new
கமல்ஹாசன்

சென்னை: தலித் சமூகத்தினரை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய் நல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம்.இந்த கிராமத்தில் தலித் சமூகத்தினர் அன்னையின் திருவிழா ஒன்றை நடத்தினர்.

ஆனால் உயர் சமூகத்தினர் தங்களுடைய அனுமதி பெறாமல் தலித் மக்கள் திருவிழா நடத்தி விட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தனர்.இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த கிராமத்திற்கு வந்தனர்.

தலித் மக்கள் திருவிழாவுக்காக கட்டி வைத்திருந்த ஒலிபெருக்கிகளை அகற்றினர்.இதற்கிடையே தங்களது அனுமதி பெறாமல் திருவிழா நடத்தியது குற்றம் எனக் கூறி ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு உயர் சமூகத்தினர் பஞ்சாயத்தைக் கூட்டினர்.

இந்த பஞ்சாயத்து கூட்டத்தில் திருவிழாவை முன்னின்று நடத்தியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர் சமூகத்தினர் முடிவெடுத்தனர்.இதனைத் தொடர்ந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் உயர் சமூகத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதனைப் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

டிஜிட்டல்இந்தியாவில் அருவருக்கத்தக்க ஜாதிவெறி பஞ்சாயத்துகள் நடத்தி சக மனிதர்களை காலில் விழ வைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேரைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா யாவரும் என் உடன் பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாட பாட்டு கற்பிக்கும் தமிழகத்தில்தான் விழுப்புரம் ஒட்டனந்தல் கிராமம் இருக்கிறதா?

கிராம பஞ்சாயத்தில் மக்கள்.

திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரை காலில் விழ வைக்கும் கலாச்சாரம் அரு வருக்க வைக்கவில்லையா? இம்முறையே இது இறுதியான ஆக இருக்கட்டும்.அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும் என்று கூறியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிய வண் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி தீண்டாமை சட்டத்தை தீவிர மாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் மக்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!