chennireporters.com

#kanimozhi has NO ENTRY in tamil nadu politics ; தமிழக அரசியலில் கனிமொழிக் NO ENTRY. செக் வைத்த துர்கா..

திமுகவின் வேட்பாளர் பட்டியல் தாமதமானதற்கு கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணம், இந்த டென்ஷன் ஒரு பக்கம் என்றால் ஸ்டாலினுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் தங்கை கனிமொழி எம்பி வைத்த ஒரு அன்பு கோரிக்கை வைத்துள்ளார். இதனால் முதல்வருக்கு BP அதிகரித்து உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினை தனிமையில் சந்தித்த கனிமொழி தனக்கு டெல்லி அரசியலை விட தமிழ்நாடு அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் அதனால் தனக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு அன்புடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது மட்டுமல்ல டெல்லியின் சீதோசன நிலை தனது உடல் நலத்துக்கு ஒத்துவரவில்லை என்றும் கடந்த ஒன்றரை மாதமாக சளி தொந்தரவாள் அவதிப்பட்டு வருவதாகவும் சொல்லி இருக்கிறார் கனிமொழி. மேலும் டாக்டர்கள் டெல்லியின் காற்றில் மாசு அதிகரித்துள்ளது.மேலும் அங்குள்ள இயற்கை சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி டெல்லிக்கு போவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர் என்றும் ஸ்டாலின்யிடம் அன்புடன் கோரிக்கை வைத்துள்ளார் கனிமொழி.தனது தாயார் ராசாத்தி அம்மாவுக்கு வயதாகி விட்ட நிலையில் அவரோடு உடன் இருக்க விரும்பதாகவும் கூறி இருக்கிறார். மேலும் அடிக்கடி டெல்லி சென்று விடுவதால் அம்மா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார் அன்பு தங்கை கனிமொழி.மேற்கண்ட அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழ்நிலைகளை ஸ்டாலின்யிடம் எடுத்து சொல்லி மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தார் கனிமொழி.

share.chennai reporters/web.com

அவரது இந்த கோரிக்கையை பற்றி ஸ்டாலின் உடனடியாக எந்த பதிலும் சொல்லவில்லை. இது குறித்து தனது கிச்சன் கேபினட் தலைவர் துர்காவிடம் ஸ்டாலின் ஆலோசித்துள்ளார் .அப்போது உதயநிதி ஸ்டாலினின் அரசியலில் எதிர்காலத்தில் கனிமொழியின் மாநில அரசியல் என்ட்ரி ஆபத்தை ஏற்படுத்தும் என துர்கா ஸ்டாலின் கருதுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.அது மட்டுமல்ல கனிமொழி உதயநிதிக்கு எதிராக செயல்படாவிட்டாலும் அவரது ஆதரவாளர்கள் அல்லது அவரது சமூகத்தை சார்ந்தவர்கள் நிச்சயம் இதை எதிர்காலத்தில் ஒரு போட்டி சூழலை உருவாக்கி விடுவார்கள் என்ற சந்தேகம் ஸ்டாலின் வீட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. என்கிறார்கள் தகவல் அறிந்த திமுக முக்கிய தலைவர்கள்.இதற்கிடையில் கனிமொழி எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற விவாதம் ஆதரவாளர்களிடையே சூடு பிடித்து இருந்தது.

share.chennai reporters/web.com

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருச்செந்தூர் என மூன்று தொகுதிகளில் நிற்க கனிமொழிக்கு விருப்பம் மனு கொடுத்திருந்தார்கள் கனிமொழி ஆதரவாளர்கள். இதில் எந்த தொகுதிகளிலும் அவர் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

கனிமொழிக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் கனிமொழி அண்ணன் ஸ்டாலின் மீது கடும் வருத்தத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டார உபிக்கள்.

தனது அம்மாவும் உறவினர்களும் தனது சமுதாயத்தினரும் கண்டிப்பாக நீங்கள் தமிழ்நாட்டு அரசியலில் களமிறங்க வேண்டும் என்று கனிமொழியை  உசுபேற்றி வருகிறார்களாம்.

இதையும் படிங்க.!