கர்நாடக மாநிலத்தில் பெருகிவரும் youtube சேனல்களில் வெளியிடும் தவறான செய்திகளால் அரசிற்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு உரிமம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா.
கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் போலி செய்திகள் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் youtube சேனல்களுக்கு உரிமம் அதாவது லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு பரிசிளித்து வருகிறது. இந்த யோசனை சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களை கட்டுப்படுத்த உதவும் என்று கர்நாடக அரசு கருதுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பல youtube சேனல்கள் போலி செய்திகளை வெளியிட்டு அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது அதனால் சமூகத்தில் பதற்றம் உருவாகின்றன அதேபோல சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகைகள் வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.குறிப்பாக உடல் நலம் அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான தவறான தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

யூடியூப் சேனல்கள் உரிமம் இல்லாததால் எந்த சேனல் நம்பகமானது எது நம்பகமற்றது என்பதை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.
கர்நாடக அரசின் இத்திட்டம் தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு வழங்கும் உரிமம் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் யூடியூப் சேனல்களை நடத்தும் நபர்களின் பொறுப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
அரசு வழங்கும் உரிமத்தை பெறாமல் யூடியூப் சேனல்களை நடத்த அனுமதிக்க முடியாது. youtube சேனல்கள் உரிமம் பெறாதவர்கள் அல்லது தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இத்திட்டம் பத்திரிகை சுதந்திரத்திற்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாறாக உண்மையையும் பொறுப்பையும் நிலை நிறுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.யூடியூப் சேனல் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் விரைவில் அரசு அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு ஒரு குழுவை அமைத்து இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் சட்டபூர்வ சவால்கள் மற்றும் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

யூடியூப் சேனல் போன்ற உலகளாவிய சமூக வலைதளங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படும் சில பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு விமர்சனம் செய்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் சிறு சேனல்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இத்திட்டம் அரசின் கொள்கைகளுக்கு எதிரான உள்ளடக்கத்தை வெளியிடும் சேனல்களை முடக்க அரசு பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த யோசனை இன்னும் பரிசீலனை நிலையில் உள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்ட பின்னரே கர்நாடக அரசு ஒரு இறுதி முடிவை எடுக்கும். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இது மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
