chennireporters.com

திருவள்ளூர் அருகே 24 மணி நேரமும் மக்கள் பணி செய்து வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி.

கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி

திருவள்ளூர் அருகே தண்ணீர் குளம் என்ற கிராமத்தில் 24 மணி நேரமும் மக்கள் பணி செய்து வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி பற்றி புகழ்ந்து பேசி வருகிறார்கள் கிராமத்து பொதுமக்கள்.

சென்னை சூளைமேடு சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வி.ஏ.ஓ தேர்வில் தேர்ச்சி பெற்று திருவள்ளூர் மாவட்டம் தண்ணீர்குளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை அவ்வூர் மக்களுக்காகவே அவர் வி.ஏ.ஓ அலுவலகத்தை வீடாக மாற்றி பணியாற்றி வருவது அப்பகுதி மக்களிடையை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள், மாணவர்கள் என யார் எந்த ஒரு சான்றிதழ் கேட்டு சென்றாலும் தாமதிக்காமல் உடனே விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்கி வருகிறார்.

அந்த ஊர் மக்கள் கஸ்தூரியை வீர பெண்ணாக பார்த்து வருகின்றனர் தமிழகத்தில் வி.ஏ.ஒ.வாக வேலை செய்பவர்கள் அந்த கிராமத்திலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்று அரசாணை போடப்பட்டு இருந்தாலும் ஆனால் பல வி.ஏ. ஓக்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் தங்குவதில்லை.

அவர்கள் விருப்பப்படி வருவதும் செல்வதுமாக இருப்பார்கள் அவர்கள் அரசு அலுவலக நேரத்திற்கு வந்து செல்லாமல் பொதுமக்களை அலைக்கழித்து வருவார்கள்.

இந்நிலையில் கஸ்தூரியோ வி.ஏ.ஓ.அலுவலகத்திலே தங்கி மக்களின் குறைகளைத் தீர்க்கும் உண்மையான அரசு ஊழியராக இருந்து வருகிறார்.

அந்த ஊரில் அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் கஸ்தூரி வி.ஏ.ஓ வாக வருவதற்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்து போலியாக பட்டா போட்டு விற்பனை செய்தும் வந்துள்ளனர்.

ஆனால் கஸ்தூரி அந்த கிராமத்தில் வி. ஏ. ஓ வாக பதவி ஏற்றவுடன் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து அரசு சொத்துக்களை பாதுகாத்து வருகிறார் ,

தனி ஒரு பெண்மணியாக திருமணமே செய்து கொள்ளாமல் விஏஓ அலுவலகத்திலேயே தங்கி சேவை செய்து வரும் இவர், கொரோனா காலத்தில் கூட அவர் வீட்டிற்கு செல்லாமல் அம்மக்களின் குறைகளையும் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளார்.

மக்களின் குறைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் அன்பையும் செலுத்தி வருகிறார் கஸ்தூரி.

அவர் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிக குறுகலாக இருப்பதாலும் எந்த நேரத்தில் இடிந்து கீழே விழும் என்ற அச்ச உணர்வு தூண்டும் வகையில் கட்டிடம் இருந்து வருகிறது அவர் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்கள் வீட்டில் ஒரு பெண்மணியாக கஸ்தூரியை பார்த்துக் கொள்கின்றனர் வி.ஏ.ஓ.வுக்கு அவர்கள் சில உதவிகளையும் செய்து வருகின்றன.
இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல் கிராம மக்களுக்காக தன்னை அற்பனித்து கொண்டுள்ளார் அரசு பணியில் 24 மணி நேரமும் கஸ்தூரி அந்த கிராமத்தில் பணியாற்றி வருவது கிராம மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

அக்கிராம மக்கள் கஸ்தூரியை பணியையும் அவரது பண்பையும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர் இத்தகைய வி.ஏ.ஓ.வை இதுவரை கண்டதில்லை என்று தண்ணீர் குளம் கிராம பொதுமக்கள் அவரை பாதுகாத்து வருகின்றனர்.

அவர் எங்கள் கிராமத்தை விட்டு செல்லக்கூடாது அவர் இங்கேயே பணியாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

சிதிலமடைந்து காணப்படும் விஏஓ அலுவலகத்திற்கு பதிலாக கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய அலுவலகம் ஒன்றை அவருக்கு அரசு கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க.!