#breaking news; exclusive story
அதிகாரத் திமிரில் அரசு அனுமதி இல்லாமல் தன் மனைவி சேர்மன் அறைக்கு பக்கத்தில் தனக்கொரு ரூமை ஒதுக்கி அதில் பல்வேறு பஞ்சாயத்துகளை செய்து வரும் பூந்தமல்லி திமுக சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர் நடத்திய கட்டப்பஞ்சாயத்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 கவுன்சிலர்கள் உள்ளனர் திமுக நகராட்சி சேர்மன் ஆக இருப்பவர் திமுகவை சேர்ந்த காஞ்சனா என்பவர் இவரது கணவர் சுதாகர் இவர் நகராட்சி அலுவலகப் பணிகளில் தலையிட்டு எல்லாவிதமான பணிகளையும் இவர் தான் தன் மனைவிக்கு பதில் செய்து வருகிறார் அதிகாரிகளை மிரட்டுவது தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று உத்தரவிடுவது பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் கணவருக்கு அதாவது சுதாகருக்கும் ஒரு அறை ஒதுக்கப்பட்டு அவர் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார்.
கழிவுநீர் டெண்டர் விடுவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள புதிய உத்தரவு.
மேலும் அண்மையில் விடப்பட்ட கழிவுநீர் எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து தனக்கு வேண்டப்பட்ட கண்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகன் என்ற இருவருக்கும் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்த ஒப்பந்தப் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து பூந்தமல்லி மேல்மா நகரை சேர்ந்த பிரேம் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கடந்த 28.8.2024 கேள்வி கேட்டு விண்ணப்பித்துள்ளார் அந்த மனுவிற்கு இன்னும் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் லதா
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் எடுக்கும் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் போலி டெண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஆணையை மதிக்காமல் போலியாக ஒரு டெண்டரை சட்டத்திற்கு புறம்பாக நடத்தி அதை கண்ணன். மோகன் மனோஜ் இவர்களுக்கு போலியாக நகராட்சி ஆணையர் மற்றும் தலைவர் காஞ்சனாவின் கணவர் சுதாகரால் செட்டிங் டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் மற்ற நபர்கள் கழிவு நீர் வாகனம் இயக்கினால் இவர்களை கண்ணன், மனோஜ், மற்றும் மோகன் ஆதரவாளர்கள் மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக பஞ்சாயத்து சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர் நகராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
மோகன்
சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தில் முதல் தளத்தில் தனது மனைவி காஞ்சனாவுக்கு ஒதுக்கப்பட்ட அரைக்கு பக்கத்திலேயே தனது கணவர் சுதாகருக்கு ஒரு அறையை ஒதுக்கி சேர்மன் உத்தரவு போட்டு இருக்கிறார். அந்த அறையில் உட்கார்ந்து கொண்டு சுதாகர் எல்லா பஞ்சாயத்துகளையும் நடத்தி வருகிறார். அதாவது பூந்தமல்லியில் உள்ள பி எஸ் டி என்ற நிறுவனத்திற்கு 15க்கும் மேற்பட்ட கழிவுநீர் வண்டிகள் வைத்து நீண்ட காலமாக தொழில் செய்து வருகின்றனர்.
அதன் உரிமையாளர்களான கண்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி மோகன் மற்றும் மனோஜ் ஆகியோர் ஒரு அணியாகவும் பிரேம் மற்றும் ராஜி என்பவர் ஒரு அணியாகவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார் சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர் அந்த பஞ்சாயத்தில் தங்களுக்கு எந்த உதவிகளையும் செய்ய முடியாது என்று ஒருதலைபட்சமாக போலியாக வைத்த ஒரு டென்டரின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே கழிவுநீர் எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது உங்களுக்கு உதவி செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த பிரேம் என்பவர் பூந்தமல்லி நகராட்சியில் 21 வார்டுகளிலும் எடுக்கப்படும் கழிவுநீர் திருமிழிசையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது அந்த இடத்தில் தான் இந்த கழிவு நீரை ஊற்ற வேண்டும். ஆனால் மேற்படி பிஎஸ்டி நிறுவனத்தினர் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள கோல்டன் அப்பார்ட்மெண்டுக்கு எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தினமும் 100 லோடுக்கு மேல் கழிவு நீரை ஊற்றுகின்றனர்.
அரசாங்கம் ஒதுக்கிய இடத்தில் கழிவு நீரை ஊற்றாமல் கழிவு நீர் கால்வாயில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ள பகுதியில் ஊற்றுகின்றனர் . இதனால் மக்களுக்கு பல சுகாதார கேடுகளும் பல்வேறு சுகாதார பிரச்சனைகளும் ஏற்படுகிறது. ஆனால் இது குறித்து நகராட்சியை நிர்வாகமும் தாசில்தாரோ அல்லது காவல்துறையினரோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை மாறாக பி எஸ் டி நிறுவனத்தினர் மேற்படி அதிகாரிகளை கனிவுடன் கவனித்துக் கொள்ளுகின்றனர் அதனால் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் டெண்டர் விதிமுறைகள் ஈ, டெண்டர் ஆஃப்லைன், ஆன்லைனில் ஏலம் விடலாம் இதுதான் விதிமுறையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அரசு விதிமுறைகளை மாற்றியுள்ளது அதாவது கழிவுநீர் வண்டி வைத்திருப்போர் ஒரு வண்டிக்கு 2000 ரூபாய் விதம் நகராட்சி நிர்வாகத்திற்கு டிடியாக எடுத்துக் கொடுத்துவிட்டு அந்த வண்டியினுடைய அனைத்து ஆவணங்களையும் கொடுத்தவுடன் சுகாதாரத் துறையினர் கழிவு நீரை எடுக்க மேற்படி வண்டிற்கு பர்மிட் வழங்க வேண்டும் ஆனால் அதை நிர்வாகம் நடைமுறைப்படுத்தாமல் பழைய விதிமுறைகளை இன்னும் கடைப்பிடித்து வருகின்றனர்.
பூந்தமல்லி நகராட்சியில் மேற்படி பி எஸ் டி நிறுவனத்தை தவிர வேறு யாரும் கழிவு நீர் அகற்ற அனுமதிக்க கூடாது என்று அவர்கள் புகார் அளிப்பார்கள். அதாவது திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் நாங்கள் மட்டும்தான் அரசு அனுமதி பெற்ற ஒப்பந்ததாரர்கள் எங்களுக்கு மட்டும்தான் மேற்படி பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் எங்களுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் நீங்கள் கழிவினரை எடுக்க அனுமதிக்க கூடாது என்று நிறுவனத்தையும் மிரட்டுவார்கள் தனியார் நிறுவன அதிகாரிகளையும் மிரட்டுவார்கள் இதைத்தான் தற்போது வரை மேற்படி நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த கட்டப்பஞ்சாயத்து தொடர்காக சேர்மன் காஞ்சனாவின் கணவர் சுதாகர் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா மற்றும் காஞ்ணனா ஆகியோர் அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம். சேர்மன் காஞ்ணனாவின் கணவருக்கு நகராட்சி ஆலுவலகத்தில் எந்த அடிப்படையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டது என்று ஆணையர் லதா விளக்கம் அளிக்கவேண்டும்.