பாரத்திய தலித் சாகித்ய அகடாமி என்ற அமைப்பு இந்தியத் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் தலைமையில் 1984 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி அறக்கட்டளை தான் இந்த சங்கம்.
இந்தியா முழுவதும் தலைசிறந்து விளங்கும் தலித் சமூகத்தை சார்ந்த கலைப் பண்பாட்டுத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இந்த அமைப்பு சார்பில் புது தில்லியில் பஞ்சசீல் ஆசிரம பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் மண்டபத்தில் கடந்த 12ம் தேதி கலைப் பண்பாட்டில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் விருது எழும்பூரில் உள்ள கவின் கலை கல்லூரி துணை பேராசிரியர் கவிமணிக்கு விருது வழங்கப்பட்டது. மேலும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்.
டாக்டர் துணை பேராசிரியர் கவிமணி.
முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சத்திய நாராயணன் சத்யா மற்றும் முன்னாள் அமைச்சர் சங் பிரியா கௌதம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த விருதாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை அரசினர் கவின் கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் கு கவிமணி அவர்களுக்கு பாரதிய தலித் சாகித்ய அகாதமியின் 2025ம் ஆண்டிற்கான இலக்கிய சமூக கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான தேசிய விருது கடந்த 12.12.2025 அன்று புது தில்லியில் வழங்கப்பட்டது.
ஓவியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் வரலாறு – தொல்லியல் துறையில் முதுகலை எம்பில் பிஎச்டி பட்டங்கள் பெற்றவர். 
விருது பெரும் டாக்டர் துணை பேராசிரியர் கவிமணி அவர்கள்.
கவிதை, கட்டுரை எழுத்தாளர். கலை வரலாறு, தொல்லியல் துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச அளவில் வெளியிட்டு உள்ளார். அரசு கவின் கலைக் கல்லூரிகளின் முதல் பி.எச்டி ஆய்வு பட்டம் பெற்றவர் இவர்.
தமிழ்நாட்டு ஓவிய வரலாறு என்ற தலைப்பில் முதல்முறை ஓவிய வரலாற்றை எழுதியுள்ளார். மரபு ஓவியம் நவீன ஓவியம் இரண்டிலும் தலைசிறந்த கலைஞர். பாறை ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 
தோல் ஓவியங்களின் சிறப்பு பற்றியும் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளார். கலைத்துறையில் இளைய தலைமுறையினருக்கு இக்கால கணினி சூழலுக்கு ஏற்ப வழிகாட்டியாகவும் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
பாரதிய தலித் சாகித்திய அகடாமி விருது பெற்ற துணைப்பேராசிரியர் கவிமணி அவர்களுக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன தங்களது கல்லூரியிலும் அவருக்கு பேராசிரியர்கள் சார்பில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
