வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க தெரு நாய்களை விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 13வது வார்டில் உள்ள ஜெயா நகர், காமாட்சி அவென், யூ,ஏ எஸ் பி நகர், செந்தில் நகர் , பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பத்து நாட்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.
ஏஎஸ்பி நகரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் வளர்த்து வைத்திருந்த 10 நாய்களில் 8 நாய்கள் விஷம் வைத்த உணவை உண்ட சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது. இரண்டு நாய்கள் மட்டும் காப்பாற்றப்ட்டன. கார்த்திகேயன் அந்த இரண்டு நாய்களை எடுத்துக்கொண்டு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள Barking Fine எனும் தனியார் விலங்குகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அதில் எட்டு மாதங்கள் நிரம்பிய சில்கி எனும் நாய் விஷத்தின் வீரியம் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து இறந்து விட்டது .
பிரவுனி எனும் 11 மாதங்களான நாய் மட்டும் காப்பாற்றப்பட்டது.
விஷ உணவை உண்ட நாய்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக துடிதுடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முட்பூதர்களில் இறந்து கிடந்துள்ளன.
நகராட்சியில் இருந்து தினமும் காலையில் தூய்மைப்பணி செய்பவர்கள் காருக்கு அடியில் நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் வீரியம் வாய்ந்த விஷயத்தை உணவில் கலந்துள்ளதால் எல்லா நாய்களும் ரத்த வாந்தி எடுத்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் இறந்துள்ளன.
தனியார் விலங்குகள் மருத்துவமனையின் பிரேத அறிக்கையிலும் விஷம் கலந்த உணவுதான் நாய்களின் இறப்பிற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விஷம் வைத்த நபர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒவ்வொரு பகுதியாக விஷம் வைத்து நாய்களை கொன்று இருக்கிறார் . கடந்த 21ஆம் தேதி இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் ஒருவர் கையில் தூக்குச் சட்டியில் தெருவில் நாய்களுக்கு உணவளிப்பது அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த நபர் விஷம் வைத்த நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள்ளாக எல்லா நாய்களும் இறந்து கிடந்துள்ளன. இரவு நேரம் என்பதால் அந்த நபரின் அடையாளம் சிசிடிவியில் இன்னார் என்று தெரியவில்லை. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்த்துச் சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.
நாய்கள் இவ்வாறு விஷம் வைத்து கொல்லப்பட்டதற்கான நோக்கம் என்னவென்று தெரியவில்லை?
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நம்மிடம் இரண்டு தினங்களுக்கு முன்பே எங்கள் வீட்டு எதிரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண் குளிக்குச் சென்றுள்ளார் அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு இளைஞன் சைக்கிளில் வந்து வீட்டிற்குள் நுழைந்து கத்தியை எடுத்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளார் அவர் வைத்திருந்த செல்போனை தூக்கி வெளியில் வீசி உள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது இந்திக்காரர்கள் யாராவது இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட நேரத்தில் தெரு நாய்கள் குலைப்பதால் தெரு நாய்களை விஷம் வைத்து கொன்று இருக்கலாம் இல்லையென்றால் பகல் நேரங்களில் அனைவரும் ஆபிஸ் சென்று விடுகிறார்கள் வீட்டில் பெண்கள் மட்டும் தனியாக இருக்கிறார்கள் அந்த நேரத்தில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்று எங்களுக்கு தோன்றுகிறது.
இதுகுறித்து போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை சிசிடிவி காட்சிகளை பார்த்து தெரு நாய்களுக்கு மிச்சம் கலந்த உணவை வைக்கும் நபர் யார் என்ற விவரத்தையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கவே தெரு நாய்களை கொன்று இருக்கலாம் என்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்.