ஓசூரில் பட்டப்பகலில் கோட் அருகிலேயே வக்கீல் ஒருவரை வெட்டி கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவரை மீண்டும் , மீண்டும் கத்தியால் வெட்டும் அந்த நபரை பொது மக்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் .குற்றவியல் வழக்குகளை நடத்தி வரும் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன் இவரிடம் பலர் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகின்றனர். இவரிடம் இளம் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கண்ணன் இன்று மாலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும் போது, ஆனந்தன் என்பவர் கண்ணனை வழி மறித்து கையில் எடுத்து வந்த அரிவாளால் சரமாரியாக கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து விழுந்த கண்ணன் சாலையில் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில், மக்கள் மத்தியில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அரிவாளால் வெட்டிய ஆனந்த் என்பவரிடம் ஒசூர் நகர போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் காவல்துறை ஏஎஸ்பி அக்ஷய் அணில் வகாரே சமாதானம் பேசியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
வழக்கறிஞர் கண்ணனை சரவணன் பட்டப்பகலில் வெட்டும்போது பொதுமக்களில் ஒருவர் கூட தடுக்காமல் அதை வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் கண்ணனை மீண்டும் அந்த கொலையாளி தொடர்ந்து வெட்டும் காட்சி மனித இதயங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.