chennireporters.com

கோவை அரசு மருத்துவமனையில் தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்.

c hospital

நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர கொரோனா நோயாளிகளுக்கும் சிறப்பு வார்டுகள் அமைத்து சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

covi
கோவை அரசு மருத்துவமனை

கோவை அரசு மருத்துவமனை டீன் மற்றும் ஆர்.எம்.ஓ பொன்முடிச் செல்வன் ஆகியோர் பணிகளை முடுக்கி விட்டு களப்பணி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் இருந்து நோயாளியை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்ததில் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் நோயாளிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர் இந்த சம்பவத்தால் மருத்துவமனை யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க.!