மீண்டும் அரசு உத்தரவை மதிக்காமல் கோயம்பேட்டில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் மாமுலாக தங்களது பணிகளை செய்யாமல் கட்டி வருகின்றனர் என்று குற்றச்சாட்டுகிறார்கள் பொது மக்கள்.
கோயம்பேட்டில் இயங்கி வந்த ஆம்னி பஸ் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது அதை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் எதிர்த்தனர் கிளாம்பாகத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் நாங்கள் பேருந்துகளை இயக்க முடியாது எங்களுக்கான பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்துமிடம் கழிவறைகள் இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் ஒய்பியும், பாக்கியலட்சுமி, நேஷனல் ,எஸ்பிஎம், ரதிமீனா போன்ற பெரிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி கிளாம்பாக்கத்தில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்திற்கு நாங்கள் போக முடியாது. அங்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்று தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போரூர் மற்றும் ரெட்டில்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து நீங்கள் பஸ்ஸை இயக்கிக் கொள்ளலாம் என்று ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இருப்பினும் அரசு மேற்படி தனியார் பேருந்து நிறுவனங்கள் உடனடியாக சென்னை சிட்டிக்குள் வரக்கூடாது என்றும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதன் பிறகு அரசின் கட்டாயத்தால் அனைத்து பேருந்து நிறுவனங்களும் கிளாம்பாக்கத்திற்கு சென்றனர். சில நிறுவனங்கள் போரூர் மற்றும் ரெட்டில்ஸ்,ஆவடி,அம்பத்தூர் பகுதிகளில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்த நிலையில் போக்குவரத்து துறை முக்கிய அதிகாரிகள் ஆணையர் மற்றும் பல அதிகாரிகள் மேற்படி தனியார் நிறுவன உரிமையாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டே தென் மாவட்டங்களுக்கு அதாவது திருநெல்வேலி,மதுரை,திருச்சி,நாகர்கோயில் மார்த்தாண்டம்,தூத்துக்குடி,திருச்செந்தூர்,உடன்குடி,தேனி,கம்பம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல் என மற்ற பல பகுதிகளுக்கு கோயம்பேடு நகரை சுற்றியும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் துணையுடன் பேருந்து இயக்கி வருகின்றனர்.
கோயம்பேடு மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக காலை,மாலை,இரவு நேரங்களில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து மதுரவாயில் தோள்கட்டு வரை இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பள்ளி செல்லும் மாணவர்கள் ,ஆபீஸ் செல்லும் அதிகாரிகள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு கிளாம்பாக்கத்தில் இட ஒதுக்கியும் மேற்படி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அங்கு போகாமல் போக்குவரத்து துறையினுடைய முக்கிய அதிகாரிகள் துணையுடன் கோயம்பேடு பகுதியில் இருந்து பஸ்களை தென்மாவட்டங்களுக்கு இயக்கி வருகின்றனர் .
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மாமுலாக அவர்கள் தனியார் பேருந்து உரிமையாளர் உடன் கைகோர்த்துக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். அதேபோல தற்போது உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதாவது ஆம்னி பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை பாத்ரூம் கழிவறை வசதிகள் இல்லை பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. நோய் பரப்பும் கொசுக்களும் நோய் தொற்றும் அதிகம் ஏற்படுகிறது. இதனால் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மகாராஷ்டிரா, கர்நாடகா, பெங்களூர் , மைசூர் செல்லும் பெண் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே அதிகாரிகள் தென் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பேருந்து உரிமையாளர்களை அழைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும். அரசின் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் பேருந்துகளை இயக்கி வருவீர்கள் உடனடியாக தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தையும் கிளாம்பகத்திலிருந்துதான் இயக்கவேண்டும் வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.