chennireporters.com

வீனாகும் கிருஷ்ணா நதி நீர் நடவடிக்கை எடுக்காதா பொ.ப.து. அதிகாரிகள்.

பூண்டி நீர்த்தேக்கம்

ர. பிரபாகர்

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட, கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.தற்போது அதில், பல இடங்களில் கரைகள் மற்றும் கால்வாய்கள் சேதம் அடைந்துள்ளது.அவைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனால், கிருஷ்ணா கால்வாய் மூலமாக பூண்டிக்கு செல்லக்கூடிய நீரை இடைமறித்து சிற்றபாக்கம் என்னும் இடத்திலிருந்து அந்த நீரை ஆரணி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.அந்த நீர் ஆரணி ஆற்றில் இருந்து பெரியபாளையத்தை அடுத்துள்ள பளையஞ்சேரி ஏரிக்கு செல்லும் திருப்பி விடப்பட்டுள்ளது.

இந்த ஏரிக்கு செல்லக்கூடிய வரவு கால்வாய் தூர்வாரபடாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் கரைகள் இல்லாமலும்கால்வாய் சேதமடைந்து பல இடங்களில் முட் புதர்கள் இருப்பதாலும், அந்தக் கால்வாய் தண்ணீர் செல்ல முடியாமல் தண்ணீர் வீணாய் போகிறது.

இந்நிலையில், திடீரென ஆரணி ஆற்றில் இருந்து பனையசேரி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கல்பட்டு, மேல்மாளிகைபட்டு, செங்காத்தாகுளம் போன்ற ஊர்களின் வழியாக பெரியபாளையம் தண்டுமாநகர், அம்பேத்கர் நகர், போன்ற பகுதிகளில் கடந்து செல்லும் போது, அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பல இடங்களில் வெளியேறும் ஆற்று நீர் ஊரின் வயல்வெளிகளிலும், விளைநிலத்திலும், தண்ணீர் பாய்ந்து ஓடுகின்றன .

அப்பகுதிக்கு திடீரென கால்வாயில் தண்ணீர் வந்து ஊரில் உள்ள வயல் வெளிகளில் பாய்ந்ததால் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.இதுகுறித்து, வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் சென்று கேட்டால் அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்கவில்லை.

மேலும், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்திக்க நேரில் அலுவலகத்திற்கு சென்றாலும், “கடந்த பல நாட்களாக அலுவலகத்திற்கு, யாரும் வருவதில்லை” என, பதில் வருகிறது.பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் முடியாத சூழ்நிலை நிலவுகிறது என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆரணி மற்றும் பெரியபாளையம் சித்தூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க.!