#special story #dmk party news #dmk leader karunadhi brith day news.
1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலுக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாக பிறந்தார் கருணாநிதி. பெரியாரின் பேச்சு அண்ணாவின் பேராற்றல் இயக்கப் பணிகளை பார்த்து வியந்த கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1969 முதல் 2018 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
தனது இளமைக்கால பருவத்தில் கருணாநிதி தமிழ் திரை உலகில் கதை வசனம் எழுதியவர் தூக்கு மேடை என்கிற நாடகத்தை எழுதியபோது பட்டுக்கோட்டை அழகிரி இவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அழித்தார். நன்றி விசுவாசத்தின் அடிப்படையில் தனது மகனுக்கு அழகிரி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இந்திய அரசியல் அரங்கத்தில் மிகச்சிறந்த ராஜதந்திரி என பெயர் பெற்றவர் கருணாநிதி.
தனது பேச்சாற்றல் மூலம் இந்திய அரசியலையே ஆட்டி வைத்தவர். தனக்கும் தன் குடும்பத்திற்கும் தன் கட்சிக்கும் எதுவும் வந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக ஆட்சியையும் அரசியலையும் கையாண்டவர். இந்திரா காந்தியை கடுமையாக விமர்சிப்பார்.
நாம் வாழவே முடியாது நமக்கு பல நெருக்கடிகள் வந்து விடும் என ஒரு சூழல் வரும் போது நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்பார். பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பார் ஆனால் அடல் பிகாரி வாஜ்பாயை அண்ணன் என்பார் அவரது ஆட்சிக்கு ஆதரவளிப்பார்.
அரசியலின் ஒழுக்கம், அடிப்படை கொள்கை வழிமுறைகள் அனைத்தும் அவமானப்பட்டதற்கு காரணமே கருணாநிதி தான். கோவத்தை சுத்தப்படுத்துகிறேன் என மூன்று கோடி ரூபாயை ஆட்டை போட்ட கருணாநிதி சர்க்காரியா கமிஷனில் தொடங்கிய கருணாநிதியின் ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வரை நீடித்தது. அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே அந்த ஊழல் பற்றி வெளிப்படையாக பேசினார் எவ்வளவு பணம் அதில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் தனது பேச்சாற்றலாலும் தனது அரசியல் சகுனித்தனத்தாலும் கட்சியை கட்டுப்பாடாக வைத்திருந்த கருணாநிதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார்.
அதன் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் அதாவது ஜனவரி மாதம் மூன்றாம் தேதி தமிழகம் முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கோடாகாலமாக கொண்டாடப்படும். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தனது தொகுதியில் வெற்றியை இழந்து தமிழ்நாடு முழுவதும் திமுக பெரும் எதிர்பார்ப்பில் இருந்து நேரத்தில் வெற்றி பெறாமல் பெரும் தோல்வி அடைந்தது.
இதன் காரணமாக தோல்விக்கான காரணங்களை ஆராய்வது குறித்து கட்சி தலைமை பல குழுக்கள் அமைத்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருணாநிதியின் விழா கலையிழந்த விழாவாக காணப்பட்டது.
மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு மட்டும் கட்சியின் தலைவரும் தனது மகளும் மு க ஸ்டாலின் தனது மகள் கனிமொழி தனது பேரன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாள்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவில்லை. காரணம் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சி அதிகாரம் இல்லாமல் மூளை முடுக்கில் முக்காடு போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பதாக உட்கார்ந்து இருக்கும் காரணத்தால் கடைநிலை தொண்டர்கள் கூட கருணாநிதி பிறந்த நாள் விழாவை பெரிதாக கொண்டாடப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நாகூர் அனிபாவின் பாடல்கள் காலை முதலே கிராமங்கள் தோறும் நகரங்கள் தோறும் பாட ஒழிக்க தொடங்கும் அந்தந்த பகுதியில் திமுக கொடிகள் ஏற்றப்பட்டு இனிப்புகள் தருவார்கள் தங்கள் வீட்டில் ஏதோ பெரிய விழா நடப்பதை போலவே தொண்டர்கள் ஆரவாரத்தோடு மகிழ்வார்கள்.
ஆனால் இந்த முறை திமுகவின் மூத்த தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை சத்தம் இல்லாமல் கடந்து போனது. ஒரு மாபெரும் கலைஞனின் விழா சத்தம் இல்லாமல் கடந்து போனது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் பெரும் வலியை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
காரணம் கட்சியை ஒழுங்காக வழிநடத்த தெரியாமல் ஜால்ரா பாபுவை போல சில சுயநல விரும்பிகளை ஸ்டாலின் பக்கத்திலேயே வைத்துக் கொண்டதால் கட்சி இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை இனிமேலாவது திமுக தலைமை உணர வேண்டும். மூத்தவர்களை வெளியேற்றிவிட்டு ஜால்ராக்களை ஒதுக்கி தள்ளி ஒருவருக்கு ஒரு பதவி மட்டும் தான் என வழங்கி கட்சிப் பணியாற்றினால் மட்டுமே 31 இல் ஆட்சியைப் பிடிக்கும் இல்லையென்றால் வீட்டிலேயே திமுகவும் தலைவர்களும் திமுக தொண்டர்களும் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை திமுக தலைமை உணர வேண்டும்.
