chennireporters.com

கோவை நீதிபதியை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்.

கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள்இன்று முதல் நான்கு நாட்களுக்கு
கோவை NCB கோர்ட் நீதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகிறார்கள்.

கோவை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி திரு. லோகேஸ்வரன்
என்பவரிடத்தில் C.C 75/2018 என்கின்ற வழக்கு விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கின்மூன்றாம் எதிரி குமரேசன் தரப்பில் ஆஜராகவேண்டிய வழக்கறிஞர் பால்பாண்டியன் என்பவர் அன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை.

நீதிபதிஎதிரியிடம் வழக்கில் சாட்சியை குறுக்குவிசாரணை செய்யவேண்டும் உன் வழக்கறிஞர் எங்கே என்கிறார் எதிரியும்வழக்கறிஞர் வெளியூர் சென்று விட்டார்  குறுக்கு விசாரணை இல்லை என்று சொல்லசொன்னார் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே நீதிபதி கோபம் அடைந்து எதிரியை ரிமாண்ட்செய்து விடுகிறார்.அதன் பின்பு வழக்கறிஞர் ஒருவர் வந்து நீதிபதியிடம் ரிமாண்ட் உத்தரவை மாற்றம் செய்யும்படி
கேட்கிறார்.

ஆனால் அவர் முடியாது என்றுமறுத்து விடுகிறார்.கோயமுத்தூர் வழக்கறிஞர்
சங்க தலைவர் மற்றும் செயலாளர் நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதியிடம் பேசி
பிரச்சனையை சரி செய்ய நீதிபதியிடம்முறையிடுகிறார்கள் .

ஆனால் சங்க நிர்வாகிகளை மதிக்காமல் தான் அப்படிதான் செய்வேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்கிறார்நீதிபதி.

ஒரு குற்றவாளிக் காக சங்க நிர்வாகிகள் வந்து இருக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதத்தில் பேசி இருக்கிறார்.

நீதிபதியின் இந்த அராஜக போக்கை கண்டித்துகோயம்புத்தூர் வழக்கறிஞர்களிடையை நீதிபதிமீது மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது.ரிமாண்ட் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும்எதிரியை வழக்கறிஞர் பிணையில் வெளிவிட பிணை மனுதாக்கல் செய்தார்.

பிணை மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்ட நீதிபதி அதற்கு காரணமாக வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் சங்கத்தையும் அவதூறாக பேசியுள்ளார்.

வழக்கறிஞர்கள் நீதிபதியைமிரட்டியதாகவும்  எதிரியோடு கைகோர்த்து கொண்டு செயல்படுவதாகவும் வழக்கறிஞர்சங்கம் நீதிமன்ற அவமதிப்பை செய்து விட்டதாகவும் அந்த பிணை மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு ள்ளார் ‌.

கட்சிகாரர்கள் , வழக்கறிஞர்கள் , குற்றம் சாட்டபட்டவர்கள் நீதிபதிகளின் கண்களுக்கு
பிச்சைக்காரர்களாக தெரிகிறார்கள்.அவர்களுக்கு ஆதரவாக ஆஜராகும்
வழக்கறிஞர்களை தாழ்வாக பார்க்கும்மனநிலை  நீதிபதிகளிடம் இருப்பது வருத்தம்
அளிக்கும் செயல்.

வழக்காடிகளை வைத்து வழக்கறிஞர்களைஎடை போடுவது முறையாகாது .

கஞ்சா வழக்கில் ஒரு வழக்கறிஞர் ஆஜாரானால் அந்த வழக்கறிஞரை ஏளனமாக
பார்ப்பதும் திருட்டு வழக்கில் ஆஜராகும்வழக்கறிஞரை ஏளனமாக பார்ப்பதும் பெரிய
வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞரிடம் சற்றுமரியாதையோடு நடந்து கொள்வதும் நீதிபதிகளிடம் நிலவி வரும் மன நிலை வருத்தமளிக்ககூடிய குணங்களாக இருந்து வருகிறது.

இந்த வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகமுடியாத சூழ்நிலை இருந்திருக்கும் என்பதை
நீதிபதி புரிந்து கொண்டு ஒரு வாய்ப்பைவழங்கியிருக்க வேண்டும்.

நீதிபதிகள் தாங்கள் நினைக்கும் பொழுதுவழக்கறிஞர்களுக்கு தகவல் சொல்லாமல்
விடுமுறை போட்டு சென்றுவிடும் பொழுதுஎத்தனை வழக்கறிஞர்கள் எத்தனை கட்சிக்காரர்கள் அன்று வழக்கை நடத்த தயாராக நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி
விடுமுறை என்று தெரிந்து அமைதியாகசென்று விடுகிறார்கள்.

நீதிபதிகள் வழக்கறிஞர்களின் சிரமங்களைசற்று புரிந்துகொள்ள வேண்டும் வழக்கறிஞர்களுக்கு அலுவலக குடியிருப்பு கட்டி கொடுக்கவில்லை .

நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு அரசு சம்பளத்தில்உதவியாளர்கள் இல்லை.
வழக்கறிஞர்களுக்கு மாதம் மாதம் சம்பளமில்லை.

தங்கள் வழக்கறிஞர் தொழிலை தக்கவைத்துகொள்ள வழக்கறிஞர் கட்டணங்கள் கூட
வாங்காமல் வழக்கை நடத்தும் வழக்கறிஞர்கள் ஏராளம் என்பதை நீதிபதிகள் உணரவேண்டும்.

வழக்கறிஞர்கள் வாய்தா கேட்டால் வாய்தாகொடுக்க முடியாது இன்றே வழக்கு நடத்துங்கள் என்பது   வழக்கை நடத்த தயார்என்றால் வழக்கு கோப்பை தூக்கி இரண்டு
மாதம் தள்ளி போடுவது என்பதை போன்றநடவடிக்கைகள் கீழமை நீதிபதிகளிடம்
இருப்பதை நாங்கள் தினம் தினம் கண்கூடாகபார்க்கிறோம்.

குற்ற வழக்குகளில் குறுக்கு விசாரணைசெய்யவில்லை என்கின்ற காரணத்திற்காக
எதிரியை நீதிமன்ற காவலடைப்பு செய்த நீதிபதி காவல்துறை அதிகாரிகள் சாட்சியம
அளிக்க வரவில்லை என்பதற்காக அவர்களுக்கு விட்னஸ் வாரண்ட் பிறபித்து
கைது செய்ய உத்திர விடுவார்களா?செய்யமாட்டார்கள்.

கோவை வழக்கறிஞர்கள் சங்கம்எத்தனை பாரம்பரியம் மிக்க சங்கம் எத்தனை
நீதிபதிகளை உருவாக்கிய சங்கம் எத்தனைபோராட்டங்களை கண்ட சங்கம்.

விதவிதமான வழக்குகளில் வரலாற்றுசிறப்பு மிக்க விவாதங்களை நீதிமன்றங்களில்
சந்தித்த சங்கம்.கோவை வழக்கறிஞர்கள் சங்கம்மேற்கொள்ளும் நீதிமன்ற போராட்டம்
என்பது நியாயமானது.வழக்கறிஞர்களின்சுயமறியாதைக்கானது.

எம்.ரஹமத்துல்லா
வழக்கறிஞர்
மேட்டுப்பாளையம்
என்பவர் தனது முக நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!