chennireporters.com

#legendary actor delhi ganesh passed; உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 

தமிழகமே சோகம் – தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.Actor Delhi Ganesh passes away | நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ்  80 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது கூறப்படுகிறது. நேற்று இரவு ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதே நிதர்சனமான உண்மை.

நாடாக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். முன்னணி நாயகர்களன ரஜினி மற்றும் கமல்ஹாசனுடன் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Actor Delhi Ganesh Passed Away : தூக்கத்திலேயே பிரிந்த உயிர்; நடிகர் டெல்லி  கணேஷ் காலமானார்!டெல்லி கணேஷ் 1976 இல் இருந்து தற்போது வரை 400 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘தில்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் டெல்லி கணேஷ் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.டெல்லி கணேஷ் பயோடேட்டா | Delhi Ganesh Biography in Tamil - Filmibeat Tamilடெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் டெல்லி கணேஷ் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது”ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க.!