ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வடசென்னை பிரபல தாதா ரவுடி நாகேந்திரன் இன்று 2025 அக்டோபர் 9ம் தேதி மதியம் 1.10 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.
கடந்த 3ம்தேதி நாம் நமது இணையதளத்தில் பிரபல ரவுடிநாகேந்திரன் கவலைக்கிடம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி பலத்த போலீஸ் பாதுகாப்பு என்று செந்தி வேளியிட்டிருந்தோம்.
#rowdy Nagendran; பிரபல ரவுடி நாகேந்திரன் கவலைக்கிடம். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. பலத்த போலீஸ் பாதுகாப்பு. – https://www.chennaireporters.com/news/rowdy-nagendran-famous-rowdy-nagendran-in-critical-condition-admitted-to-stanley-hospital-heavy-police-security/.
அஸ்வத்தாமன்.
அவருக்கு ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. அது தவிர கடுமையான சர்க்கரை வியாதியும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலூர் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். 
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் இன்று மதியம் 2025 அக்டோபர் 9ம் தேதி மதியம்1.10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு ரவுடி நாகேந்திரன் உயிர்பிரிந்தது. இதை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஏற்கனவே ஆர்ம்ஸ்டராங் கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரது மகன் அஸ்வத்தாமன் நீதிமன்றத்தில் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை செய்ய அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அவரது இளைய மகன் அஜித் ராஜாவும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். தனது வீட்டிற்கு அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை சுற்றி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நாள்தோறும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகின. 
ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் மற்றும் ரௌடிகள் என 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்த நாகேந்திரனை போலீசார் முதல் குற்றவாளியாக சேர்த்தனர். அதன் பின் அவரது மகன் அஸ்வத்தாமனையும் வழக்கில் சேர்த்தனர். நாகேந்திரன் இறந்துவிட்ட செய்தி கேட்டதும் சிறையில் இருந்த அவரது மகன்கள் அஸ்வத்தாமன் மற்றும்அஜித் ராஜா அகிய இருவரும் கதறி அழுததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இவரது மரணம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பிரேத பரிசோதனை முடிந்ததும் அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். உடனே போலீசார் அவரது உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 
மேலும் அந்த மரண நிகழ்ச்சிக்கு எந்த ரவுடிகள் வந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சென்னை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அரசியல் கட்சியைச் சார்ந்த சிலர் துக்கம் விசாரிக்க வருவார்கள் என்று கூறப்படுகிறது. நாகேந்திரனைப் பற்றி உளவுத்துறை போலீசார் ஒரு அறிக்கையை அரசுக்கு தற்போது அளித்துள்ளனர்.
அதில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஏற்கனவே மறைந்து வாழ்ந்து வரும் ரௌடிகள் அவரது இறப்பிற்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அறிக்கை அளித்துள்ளனர். எனவே ஸ்டான்லி மருத்துவமனையை சுற்றி பலத்த ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது வீடு அருகேவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால் நாகேந்திரன் குடும்பத்தினர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல இருப்பதாக அவர்களது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
நாகேந்திரன் சமரசம் பேசியும் உடன்படாத ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங்கிடம் சமரசம் பேசியும் உடன்படாது ஏற்படாததால் கொலை நடந்ததாக ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் கூறி வருகின்றனர். சென்னையில் ஒரு ரவுடி தான் இருக்க வேண்டும் ஆனால் ஆம்ஸ்ட்ராங் தலைவராக இருப்பதால் நாகேந்திரன் தரப்பினருக்கு ஆம்ஸ்ட்ராங் பெரும் தலைவலியாக இருந்து வந்தார்.
நாகேந்திரன்.
இதனால் நாகேந்திரனுக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினருக்கும் அடிக்கடி மோதல் போக்கு நீடித்து வந்தது. நிலத்தகராறு கட்டப்பஞ்சாயத்து என பல பிரச்சனைகளில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. வேலூர் சிறையில் கைதியாக இருந்த போது ஆர்ம்ஸ்ட்ராங்ளிடம் செல்போனில் பேசிய நாகேந்திரன் இருவரும் சமரசமாக போகலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அதை ஆம்ஸ்ட்ராங் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ரவுடி நாகேந்திரன் மீது 28க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் 5 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, ஆள் கடத்தல் கட்டப்பஞ்சாயத்து என 28-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் தனது வாழ்க்கையை கழித்த நாகேந்திரன் தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளார் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
