chennireporters.com

#liquor sales 725 crore; பொங்கல் திருநாள்; 725 கோடிக்கு மது விற்பனை.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது மூன்று நாட்களில் ரூ.725 கோடி மதிப்புள்ள மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட  அதிகம் என்கின்றனர் டாஸ்மார்க் நிறுவன அதிகாரிகள்.

ஜனவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை( ஜன.15ம் திருவள்ளுவர் தினம் தவிர்த்து) 3 நாட்களில் மட்டும்  ரூ.725.56 கோடிக்கு தமிழகம் முழுவதிலும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

🍸கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13, 14,15 ஆகிய 3 நாட்களில் 678.65 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.TASMAC holidays : டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு - Holiday notification for Tasmac shops in Tuticorin district today KAK - Asianet News Tamil🍸கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு இதுவரை கூடுதலாக ரூ.162 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை.

🍻மது விற்பனையில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் மதுரை இம்முறை பின் தங்கி விட்டது. அங்கு ரூ.149.55 கோடிக்கு தான் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

🍹பொங்கல் பண்டிகை மதுபான விற்பனையில் இந்தாண்டு திருச்சி மாவட்டம் ரூ,179 கோடியுடன் முதலிடம் பிடித்து நம்பர் (1) இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

🥂சேலம் மாவட்டம் ரூ.151.60 கோடி விற்பனையை எட்டி இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

article_image1தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இதில் வரும் வருமானத்தில் தான் அரசு இயந்திரமே இயங்குவதாகவே கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறுகிறது.

Tasmac outlets in Chennai to get PoS machines from January

அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலையொட்டி 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட  ரூ.47 கோடி அதிகம் என அன்புமணி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை.. டாஸ்மாக்கில் ரூ.725 கோடிக்கு மது விற்பனைஅதாவது தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாகவும், இது கடந்த ஆண்டின் விற்பனை அளவான ரூ.678.65 கோடியை விட ரூ.47 கோடி அதிகம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருக்கின்றன என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.article_image3

ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான் ராமதாசின் நோக்கம் அதற்காகத் தான்  அவர் கடந்த 45 ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டை ஆள்பவர்களோ, தமிழ்நாட்டில் ஒருவர் கூட மது குடிக்காதவர்களாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அனைவரையும் தமிழக அரசு மதுவுக்கு அடிமையாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவு தான் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்திருக்கிறது.

டாஸ்மார்க் கடையில் மது விற்பனை செய்யும் காட்சி.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம்  ரூ.47 கோடி அதிகரித்திருக்கிறது என்பதன் மூலம் மது குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும் தான் திராவிட மாடல்  அரசின் சாதனை ஆகும். ஒரு புறம் போதையின் பாதையில் யாரும் போகக் கூடாது;Booze bumps: Time to turn around TASMAC from its terrible mess - Frontlineதீமை என்று தெரிந்தும் அதை விலை கொடுத்து வாங்கலாமா? என்று ஒரு புறம் தொலைக்காட்சி விளம்பரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் பொங்கல் திருநாளில் கூட மதுக்கடைகளை திறந்து வைத்து இளைஞர்களையும், மாணவர்களையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகிறார். இத்தகைய இரட்டை வேடத்தை மு.க.ஸ்டாலின் அவர்களைத் தவிர வேறு எவராலும் நடிக்க முடியாது.

Pongal liquor sales

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மது விற்பனை மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆனால் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதத்தில் இந்த மாவட்டங்கள் கடைசி இடத்தில் இருக்கின்றன. என்பது அதிர்ச்சி தரும் தகவல். அந்த மாவட்டங்களை கல்வியில் உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காத திமுக அரசு, அந்த மாவட்டங்களை மதுவில் மூழ்கடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

Tamil Nadu government jacks up liquor prices to boost coffers - The Economic Times

தமிழ்நாட்டில் மூலைக்கு மூளை கஞ்சாவும், மதுவும் தான் தாராளமாக கிடைக்கின்றன.  அதனால் தமிழ்நாடு சீரழிவை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.Pongal Liquor Sales: பொங்கல் 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை..  இதுதான் திராவிட மாடல் சாதனை... அன்புமணி ராமதாஸ் விமர்சனம் | Times Now Tamilகஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!