chennireporters.com

இணையத்தில் வைரலாகும் லோடிங் டோஸ் மாத்திரைகள்.

பொதுமக்கள் வெளியில் பயணம் செய்யும்போது தங்கள் பாக்கெட்டில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய லோடிங் டோஸ் என்னும் மாத்திரைகளை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கோவையை சேர்ந்த பிரபல மருத்துவர் பக்தவத்சலம் அறிவுறுத்தி உள்ளார்.அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுமக்கள் குறிப்பாக புகை பிடிப்பவர்கள், மதுப் பழக்கம் உள்ளவர்கள், கொழுப்பு சத்து அதிகமாக உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.அந்த நேரத்தில் இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் மூன்று மணி நேரம் கழித்து கூட மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறலாம்.

ஒருவேளை நமக்கு பயன்படவில்லை என்றால் கூட நாம் வெளியில் பயணம் செய்யும்போது நம் அருகில் இருப்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால் கூட அவருக்கு கொடுத்து நாம் உதவி செய்யலாம் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க.!