chennireporters.com

#loans to fishermen மீனவர்களுக்கு தாட்கோ மூலம் லோன் வழங்கியதில் 5 கோடி ரூபாய் முறைகேடு தட்டி கேட்டவரை ஊரை விட்டு ஒதுக்கிய அவலம்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கலங்கரை விளக்கம் குப்பத்தில் தாட்கோ மூலம் மீன் வலை வாங்க வழங்க வழங்கப்பட்ட கடன் உதவியில் ஐந்து கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது அதை தட்டி கேட்ட இளைஞரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் குப்பத்து பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்த காரணத்தினால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி உள்ளனர். மேலும் ஊருக்குள் நுழைந்தால் அவரை கிராமமே வெட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.  இந்த செய்தி திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்கள் கிராமத்தில் தாட்கோ கடன் வழங்குவதற்காக ஆதிதிராவிட நலத்துறை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை நடத்தினர் இதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

இந்த கடன் தொகையை பெற பனப்பாக்கம் மற்றும் கோளூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தாட்கோ கடன் வழங்குவதாக தெரிவித்தனர்.  மேற்கண்ட தாட்கோ  கடன் வழங்க வேண்டும் என்றால் மேற்கண்ட கூட்டுறவு சங்கத்தில் கடனுக்காக வீட்டுமனை பட்டா அல்லது நாலு சவரன் தங்க நகையை ஒவ்வொருவரும் அடமானமாக வைக்க வேண்டும் என்று மேற்படி கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் திருப்பதி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து எங்கள் கிராமத்தில் உள்ள 250 குடும்பங்களில் 118 குடும்பத்தினர்ருக்கு உறுப்பினருக்கு கடன் வழங்க விண்ணப்பம் வழங்கப்பட்டது.

மேற்கண்ட குடும்பத்தினர் நாலு சவரன் தங்க நகை அடமானம் வைத்த பின்னரே அவர்களின் கூட்டுறவு வங்கி கணக்குகளில் தாட்கோ வழங்கப்பட்ட கடன் உதவியாக ஒரு விண்ணப்பதாரருக்கு இரண்டு லட்சத்து 98 ஆயிரத்து 640 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. அனைத்து பயனாளிகளின் வங்கி கணக்கு புத்தகத்தையும் கோளூர் மற்றும் பணப்பாக்கம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மேலாளர் திருப்பதி என்பவர் எங்களின் ஊர் நிர்வாகத்தாரிடம் கொடுத்துள்ளார் எங்கள் ஊர் நிர்வாகத்தினர் தாட்கோ மூலம் வழங்கப்பட்ட கடன் உதவி பணத்தை எங்கள் வங்கி கணக்குகளில் இருந்த அனைத்தையும் எடுத்து ஒரு குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டும் 118 குடும்பங்களுக்கு பணத்தை பகிர்ந்து அளித்தனர்.

மேற்கண்ட கடன் தொகையைப் பெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் எனது தாயார் லோகேஸ்வரி மேற்படி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தாட்கோ கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரண நகைக்கு 11 சதவீதம் வட்டியாக ரூபாய் 35 ஆயிரம் பணத்தை செலுத்த வேண்டும் என்று வங்கியினர் தெரிவித்ததின் பேரில் தாட்கோ கடனை திருப்பி செலுத்துவதற்காக கடந்த ஆறு அஞ்சு 2024 ஆம் தேதி அன்று வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் சென்று கடனை திருப்பி செலுத்துவதற்கான ஆவணங்களை சங்கத்தின் ஊழியரிடம் சமர்ப்பித்தோம்.

வங்கி ஊழியர்கள்.

அப்போது சங்கத்தின் ஊழியரிடம் எங்களின் கடன் விவரங்களை கேட்டதற்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 2 லட்சத்து 98 ஆயிரத்து 64 எனவும் அவற்றில் மானியமாக 89 89 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.

புகார் செய்தவர். ராஜ்கமல் 

இதனை கேட்டு அதிர்ந்த நிலையில் எங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது மீதி பணம் வழங்கப்படவில்லை என்றும் ஏன் எங்களுக்கு வந்த தாட்கோ கடன் முழுத் தொகையை வழங்காமல் ஊர் நிர்வாகத்தினர் எதன் அடிப்படையில் தென்றல் 2 லட்சம் ரூபாயை மட்டும் வழங்கினார்கள் என்று கேட்டதற்கு அந்த ஊழியர் நீங்கள் மேலாளரை சந்தித்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினால் அதன் அடிப்படையில் சங்கத்தின் மேலாளர் திருப்பதியை நேரில் சந்தித்து நான் கேட்டதற்கு அவர் உங்களுக்கு தாட்கோ கடன் மற்றும் அதன் மானிய தொகையை உங்கள் ஊர் நிர்வாகத்தினர் இடம் கொடுத்து விட்டேன் நீங்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் ஊர் கிராம நிர்வாகிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நான் மேலாளரிடம் ராஜ்கமல் ஆகிய எனது பெயரில் தாட்கோ லோன் வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு அங்கிருந்த பதிவிறிகளை பார்த்த ஊழியர்கள் எனது பெயருக்கும் லோன் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார் தமிழக அரசு வழங்கிய தாட்கோ கடன் மற்றும் அதன் மானிய தொகை வழங்காமல் எனது கையெழுத்தை போலியாக போட்டு எனக்குத் தெரியாமல் பணத்தைக் கையாடல் செய்துள்ளனர் இதற்கு கோளூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் மற்றும் ஊர் நிர்வாகத்தினரும் கூட்டாக சேர்ந்து மோசடி செய்துள்ளனர் என்பதை நான் அறிந்து கொண்டேன் மேலும் நான் எனது தாயாரும் என் வீட்டிற்கு சென்றோம் .

அப்போது எங்களின் ஊர் நிர்வாகிகளான ராஜி கம்பர் மற்றும் பாபு ஆகியோர் எங்களை வழிமறித்து நீ யாரை கேட்டு பேங்குக்கு சென்றாய் ஏன் மேனேஜரிடம் பேசினாய் என்று என்னை கேட்டு மிரட்டினார்கள் இதற்கு நான் எனக்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட கடன் விவரத்தை கேட்டேன் நம்ம ஊர் மக்களுக்கு ஒரு நபருக்கு தாட்கோ மூலம் வழங்கப்பட்ட மானியத் தொகை 89 ஆயிரம் வீதம் 118 14 களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஒரு கோடியே 5 லட்சத்து 2000 கையாடல் செய்துள்ளீர்கள் என்று தெரிவித்தேன் அதற்கு அவர்கள் ஊர் கட்டுப்பாட்டை மீறி உன்னை யார் மேனேஜரிடம் போகச் சொன்னது நீ ஊர் நிர்வாகத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் இப்போது மேனேஜர் எங்களுக்கு செல்போனில் பேசி உன்னை பற்றி புகார் அளிக்கிறார்.

ஒழுங்காக நீ ஆறு மணிக்கு ஊர் கூட்டம் நடைபெறுகிறது அதில் வந்து நீ ஒழுங்காக நிற்க வேண்டும் என்று மிரட்டி சென்றனர். மேற்கண்ட போளூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் அளித்த புகார் இணைத்து தொடர்ந்து கடந்த ஆறாம் தேதி மாலை 6:00 மணிக்கு கட்டப்பஞ்சாயத்து கும்பலை சேர்ந்த ராஜி கம்பர் ரஜினி பெண்ண முருகன் சீனிவாசன் வேலாயுதம் மற்றும் நாராயணன் ஆகியோர் ஊர் மக்கள் முன்னிலையில் பொது இடத்தில் என்னை நிற்கவைத்து தகாத வார்த்தைகளாலும் அசிங்கமாகவும் பேசினார்கள் எனது தந்தை ராஜி அவர்களையும் மிக அவமானமான அவமான வார்த்தைகளால் திட்டி பேசினார்கள். 

அதன் பின்னர் ஊர் மக்கள் முன்னிலையில் மேற்படி கோளூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக பெறப்பட்ட தாட்கோ கடன் உதவி மற்றும் அதன் மானிய தொகையில் நடந்த முறைகேடுகள் மற்றும் கையாடல் ஆகியவற்றைத் தெரிவித்தேன். ஊர் மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ராஜ்கமல்  மற்றும் வங்கி மேலாளர் திருப்பதி.

மேலும் ஏழாம் தேதி அன்று கட்டப்பஞ்சாயத்து கூட்டம் கூட்டி ஊர் முன்னிலையில் என்னை அசிங்கமாக பேசி ஊரார் கால் முன்னில் குப்பத்தார் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி என்னை மிரட்டினார்கள். நான் காலில் விளக்க விழ மறுத்துவிட்டேன். அதன் பிறகு என்னை இந்த ஊரில் உனக்கு இடம் இல்லை அண்ண, ஆகாரங்கள், தண்ணீர் யாரும் வழங்கக்கூடாது.

இந்த ஊரில் உள்ள எந்த ஒரு கடையிலும் எந்த பொருளையும் வழங்கக்கூடாது இந்த ஊரில் நடைபெறும் நல்லது கெட்டது போன்ற நிகழ்ச்சிகளில் நீ கலந்து கொள்ளக்கூடாது. இவரது தாய் தந்தை மற்றும் இவரது உறவினர் யாரும் இவரிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேச கூடாது என்று ஊர் மக்களுக்கு உத்தரவு போட்டனர். மேலும் உடனிருந்த வேலாயுதம் என்பவர் மேற்கண்ட கட்டுப்பாட்டை யார் மீதுனாலும் அவர்களுக்கு ரூபாய் 50,000 தண்டப்பணமும் தலக்கட்டுக்கு ஒரு குவாட்டரும் ஊர் நிர்வாகத்தின் மத்தியில் 15 முறை காலில் விழ வேண்டும் என்று மிரட்டி உத்தரவு போட்டார்.

மேற் சொன்ன செய்திகளின் அடிப்படையில் தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக வழங்கப்படும் கடன் தொகையை தன்னுடைய சுய தேவைக்காக கட்டப்பஞ்சாயத்து கும்பலுடன் கூட்டு சேர்ந்து பண மோசடி மற்றும் கையாடல் செய்த கோலூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மேலாளர் திருப்பதி மீதும் இந்திய இறையாண்மை மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் காலில் விழ வைக்க உத்தரவு போட்டும் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் அவமானப்படுத்தியும் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் எந்த வித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாக்கிய நபர்களான மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவடி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தமிழக முதல்வர் மற்றும் ஆகியோருக்கு பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் பல கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஊரை விட்டு ஒதுக்கி வைத்தல், சாதி மறுப்பு திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுப்பு இதுபோன்ற விஷயங்களில் தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றி பொதுமக்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க.!