இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். அவர் வீட்டு அருகில் லண்டனில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ரகுராம் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவர் ஒரு சங்கி.
இவர் ஜேம்ஸ் வசந்தன் வீட்டின் ஜன்னல் ஓரத்தில் ஒன்றை டன் எடை கொண்ட 5 ஏசி அவுட்டோர்களை வரிசையாக வைத்துள்ளார். அந்த ஏசி இயக்கினால் அதன் வெப்பம் ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை நோக்கி பாயும். இதுகுறித்து பலமுறை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அரசு அலுவலர்கள் என பலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஒரு படி மேலே போய் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டும் நாங்கள் டாக்டரிடம் பேசி இதை மாடியில் வைக்க முயற்சி செய்கிறோம் என்று சொல்லிவிட்டு மீண்டும் எந்த பதிலும் சொல்லாமல் தற்போதும் அதே நிலையில் இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பெரிய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். அரசு அதிகாரியின் நிலை அவர்கள் செயல்படும் விதம் குறித்து தனது ஆதங்கத்தை தனது முகநூலில் எழுதி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
பக்கத்து மனையில் புதுவீடு கட்டுபவர் தனது AC outdoor யூனிட்டுகளை (5 units) எங்கள் சன்னலை நோக்கி வைத்ததைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியிருந்தேன். முறைப்படி புகார் செய்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால் நடைமுறை அப்படியல்ல என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம்.
அந்த வீட்டைக் கட்டுபவர் – Dr ரகுராம் (மருத்துவர்) – 55 வயதிருக்கலாம் – தமிழ் பிராமணர் – லண்டனில் மருத்துவராகப் பணிபுரிபவர்.

Dr ரகுராம் (மருத்துவர்).
டிசம்பர் 2024-ல் அந்தக் கட்டிடவேலை மேற்பார்வையாளரை அழைத்து எங்கள் வீட்டு சன்னல் வழியாக அதைக் காட்டினோம். அவரே கொஞ்சம் அதிர்ந்துவிட்டு, மருத்துவரிடம் பேசி அதை மாற்ற உதவுவதாக சொல்லிவிட்டுப் போனார்.
ஒன்றும் நடக்காததால், மருத்துவரிடமே போனில் பேசினோம். எதுவுமே தெரியாதது போல நடித்து, ஆவன செய்வதாகக் கூறினார். எதுவும் நடக்கவில்லை. பிறகு அங்கு பணிபுரிபவர் மூலமாக அவர் அதை மாற்றப்போவதில்லை என்று அவர்களிடம் கூறியதாகக் கேள்விப்பட்டோம்.
6,000 சதுர அடி மனையில் இவ்வளவு பெரிய பங்களாவின் பரந்த மொட்டை மாடியில் இதை வைப்பதில் என்ன பிரச்சனை? அவ்வளவு இடத்தை விட்டுவிட்டு அடுத்த வீட்டு சன்னலை நோக்கி வைப்பது எவ்வளவு மனிதாபிமானமற்ற பொறுப்பற்ற ஒரு செயல்!
(காணொலிகள் இணைத்திருக்கிறேன், பாருங்கள்.)
எங்கள் பகுதி (பாலவாக்கம்) கார்ப்பரேஷன் அலுவலகத்தில் புகார் செய்தோம். ஒரு பெண் அதிகாரி வந்து பார்த்துவிட்டு, “இது கொஞ்சமும் நியாயமில்லை; கவலைப்படாதீர்கள், இதை சரிசெய்து கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
எங்களோடு தொடர்பிலிருந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் போன் அழைப்புகளைத் தவிர்க்கத் தொடங்கினார். பிறகு மொத்தமாகத் துண்டித்து விட்டார். எங்களுக்கு விளங்கியது.
அதே அலுவலகத்தில் அவருடைய உயரதிகாரிக்கு (AE) புகாரளித்தோம். பொறுப்புடன் பதிலளித்தவர் சில நாட்களில் அமைதியானார். பல அழைப்புகளுக்குப் பிறகு தயக்கத்துடன், “நீங்கள் வேறு ஏதாவது துறைக்குப் புகார் செய்யுங்கள்” என்று அற்புதமான ஆலோசனை சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்டார். எங்களுக்கு விளங்கியது.
CM Cell
Chennai Mayor
Corporation Commissioner
CMDA
Pollution Control Board
Health Ministry
Ward Councillor
Adyar DC
Neelangarai AC
Neelangarai Inspector
என, எல்லாருக்கும் ஆவன செய்யச்சொல்லி மனு கொடுத்தோம். எல்லாரும் ஆவன செய்வதாகச் சொன்னார்கள். இதுவரை எந்த விளைவும் இல்லை. வீடு புதுமனைப் புகுவிழாவிற்கு வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
சில துறை அதிகாரிகள் வந்து அவரோடு இணக்கமாகப் போகச்சொல்லி அறிவுரை வழங்கினார்கள். எங்களுக்கு விளங்கியது. ஒரு அரசு மக்களுக்கு உதவ CM Cell போன்ற அமைப்பை உருவாக்கி 30 நாட்களுக்குள் ஒரு புகார் மீது செயல்பட்டு தீர்வு வழங்க உயரதிகாரிகளுக்குக் கட்டளையிடுகின்றனர்.
அவர்கள் அடுத்த நிலை அதிகாரிகளுக்குக் கட்டளையிட, நாம் எந்தத் துறைக்குப் புகாரளித்தாலும் அது இறுதியில் நம் பகுதியிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குதான் வந்து சேர்கிறது. அதே பாவப்பட்ட அதிகாரிகள்.
வரிசையாக வைக்கப்பட்டுள்ள ஐந்து ஏசி மிஷின்கள்.
சட்டம், நியாயம் எதுவென்று பார்த்து செயல்படும் அளவுக்கு முதுகெலும்புள்ளவர் அரசுப்பணிகளுக்கு வருவதில்லை என்பதை நாம் காலங்காலமாகப் பார்க்கிறோம். விதிவிலக்கான சிலரையும் நாம் அறிவோம்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
நீதி, அறம் போன்றவற்றை மனுநீதிச் சோழன் கதைகளில் படிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் போல. சமூகத்தில் பலவிதமானவரோடு போராடித்தான் வாழவேண்டியிருக்கிறது. ஆனாலும் விடப்போவதில்லை. விடவும் முடியாது.
இத்தனை டன் AC எந்திரங்கள் தினமும் ஓடி வெப்பக்காற்றை உமிழும்போது எங்களால் இந்த வீட்டில் வாழவே முடியாது. விதிவிலக்கான ஒரு அதிகாரி இல்லாமலா போவார்?
காத்திருக்கிறோம்… நம்பிக்கையுடன்!
ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய ஆதங்கத்தை தனது முகநூல் வாயிலாக எழுதி இருந்தார். அதற்கு பின்னூட்டமாக பொதுமக்கள் பலர் தங்களது கருத்தை பதிலாக அளித்துள்ளனர்.
சங்கிகளுக்கு வேலையே இதுதான் மனித உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர் எப்படி டாக்டராக லண்டனில் இருக்கிறார். என்றும் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்றும் ஒரு படி மேலே போய் சொல்லி கேட்கவில்லையா நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இரண்டு அடி பள்ளம் தோண்டி பழைய மைக்கா காய்ந்த இலைகளை போட்டு தினந்தோறும் மாலையில் எரித்து விடுங்கள் இந்த புகை அந்த ஏசியின் வழியாக அவர்களை தாக்கட்டும் தானாக வழிக்கு வருவான் டாக்டர் சங்கீ என்றும் பதில் அளித்து வருகின்றனர்.
கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள் நிட்டிசன்கள்.
மனிதர்களின் நாடியைப் பார்த்து மருத்துவம் பார்க்கும் டாக்டர் ரகுராம் மனிதர்களின் எண்ணங்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்து தனது தவறை உணர்ந்து அந்த வரிசையாக வைக்கப்பட்டுள்ள ஐந்து ஏசி யூனிட் களின் அவுட்டோர்களை மாடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் பதிலாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.
