chennireporters.com

தன் வாழ்க்கையை பிறருக்காக அற்பணிக்கும் பெண்மையே வாழ்க..

மகளிர் தினம் வெறும் கொண்டாடத்திற்கான நாள் மட்டுமல்ல.அது ஒரு போராட்டத்தின் உரிமைக் குரல் ஒரு முடியாட்சியை வீழ்த்திய வரலாறு கொண்டது மகளிர் தினம்..

முதன் முதலாக 1850-ல் தான் பெண்கள் தொழிற்சாலைகள்,அ லுவலகங்களில் பணி புரிய ஆரம்பித்தனர்.

அவர்களுக்கு அப்போது 16 மணி நேர வேலை, குறைந்த ஊதியம், வாக்குரிமை கிடையாது. *1908 ஆம் ஆண்டு*  மார்ச் 8ம் நாள் நியூயார்க் நகரில் வேலை நேரக் குறைப்பு,ஊதிய உயர்வுக்காக 10000-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்..

முதன் முதலாக உழைக்கும் மகளிர் நடத்திய போராட்டம் அது.*1910 ஆண்டு* டென்மார்க் தலை நகரில் சர்வதேச பெண்கள் உரிமைமாநாட்டில் ஜெர்மன் பிரதிநிதிகிளாரா  ஜெட்கின் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்து.ஒரு குறிப்பிட்ட நாளை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறை கூவல்விடுத்தார். இதையடுத்து சில ஐரோப்பிய நாடுகளில் *1911 ஆம் ஆண்டு* முதல் மகளிர் தினம் கொண்டாட்ப்பட்டது.

*1917ஆம் ஆண்டு* முதல் உலகப் போர் நடந்த காலத்தில் ரஷியாவில் அமைதியும் ரொட்டியும்’ ( Bread and Peace) தான் தேவை என்று முழக்கமிட்டு
தங்களுக்கு உரிமைவேண்டி ரஷியப் பெண்களால்ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.நான்கு நாள் நடந்த அந்தப் போராட்டத்தால் ரஷியாவின் ஜார் மன்னராட்சி வீழ்ந்தது.

மன்னராட்சி முடிந்த பின் வந்த குடியரசு ரஷிய மகளிருக்கு வாக்குரிமை வழங்கியது. *இந்த புரட்சிப் போராட்டம் நடந்த நாள் மார்ச் 8..*அப்போது முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப் படுகிறது.

ஆயினும் ஐ.நா. 1975 ஆம் ஆண்டு தான் சர்வதேச மகளிர் தினத்தை அங்கீகரித்தது. *Equality For All எல்லோருக்கும் சம நிலை என்பது தான் இந்த வருட சர்வதேச மகளிர் தினத்தின் முழக்கம்*.

*அனைத்து மகளிருக்கும் சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.காம் இணையதளத்தின் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த சர்வதேச மகளிர் தின நல் வாழ்த்துகள்..*

இதையும் படிங்க.!