chennireporters.com

#looting by tasmac officials sharing ; டாஸ்மாக் ஊழியர்களின் கொள்ளை. பங்கு பிரிக்கும் அதிகாரிகள்.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் 12 மணிக்கு கடை திறந்து 10 மணிக்கு கடையை மூட வேண்டும் என்பது விதி ஆனால் 9:45 மணிக்கு கடையை மூடிவிட்டு பின் வழியாக  விலை குறைந்த சரக்குகள் மற்றும் பியர்கள் ஒவ்வொன்றிலும் 10பெட்டிகள் முதல் 20 பெட்டிகள் வரை கள்ளத்தனமாக கொடுத்து விடுவார்கள். மு க ஸ்டாலின்.

அது மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் டாஸமாக்கடைகளில் குளிர்சாதனப்பெட்டிகளே இல்லை. அதனால் குளிர்ந்த பீர் வேண்டுமானால் பாரில் தான் வாங்க வேண்டும்.  அதனால் 30ரூபாய் வரை கூடுதலாக தரவேண்டியுள்ளது. அதில் விற்பனையாளருக்கு 20ரூபாய் லஞ்மாக கொடுக்கப்படுகிறது. அதில் அதிகாரிகளுக்கு்ம பங்கு கொடுக்கப்படுகிறது. பார் நடத்தும் உரிமையாளர் இதற்கான கமிஷனை கடை விற்பனையாளரிடமும் மேற்பார்வையாளரிடமும் கொடுத்து விடுவார்கள் அவர்கள் வாங்குகிற பங்கில் பாதி பங்கை மேலாளருக்கும் மற்ற உயர் அதிகாரிகளுக்கும்  கொடுத்து விடுவார்கள்.உதாரணத்திற்கு மிக விலை குறைந்த சரக்குகள் டாப் மேன்,  மெனஸ் கிளப், மானிட்டர், ஓல்ட் சிப், எக்ஸ்பிரஸ், பிளாக்பேரல், ஓட்கா, ஓல்ட் மக்,  பியரில் உள்ள அனைத்து வகைகளையும் கொடுத்து விடுவார்கள் குடிமகன்கள் கடை முடிந்த நேரத்திற்கு பிறகு பிளாக்கில் ஒவ்வொரு நூற்று ஐம்பது ரூபாய் சரக்கை 250 ரூபாய்க்கும் 170 ரூபாய் பிற சரக்குகள் 250 ரூபாய்க்கும் விற்பார்கள். இதில் லோக்கல் போலீசாருக்கும், மது விலக்கு போலீசாருக்கும் ஹைவே பெட்ரோல் போலீசாருக்கும் பங்கு கொடுப்பார்கள். இந்த நிலையில் ஒரு கடை ஒன்றிற்கு ஒரு நாள் வசூல் மட்டும் இருபத்தைந்து ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை கடை ஊழியர் மேற்பார்வையாளர் மற்ற அதிகாரிகள் பங்கு பிரித்துக் கொள்வார்கள்.

பார் உரிமையாளருக்கு மட்டுமே ஒரு நாள் ஒன்றுக்கு பாட்டில் பிளாஸ்டிக் மற்றும் ஸ்னாக்ஸ் விற்ற வகையில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் லாபம் பார்க்கிறார்கள். இதை எதிர்த்து கேட்டால் குடிமகன்களை போலீசை வைத்து மிரட்டுவார்கள்.

இது தவிர குடிமகன்கள் விரும்பி குடிக்கும் மிக விலை குறைந்த சரக்கில் தரமற்ற சரக்குகளும் டூப்ளிகேட் சரக்குகளும் விற்பனை செய்கிறார்கள். ஏற்கனவே குவாட்டர் குடித்த குடிமகனுக்கு அடுத்த குவாட்டர் குடிக்கும் போது அது தரமான சரக்கா தரமில்லாத சரக்கா என்பது தெரியவே தெரியாது.  ஆனால் அந்த சரக்கில் தண்ணீர் ஊற்றியும் பாட்டிலின் மூடியை கழற்றி ஊசி மூலம் தண்ணீர் ஏற்றி சரக்கை விற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி ஒரு கடைக்கு மட்டுமே  நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கும் டாஸ்மாக் ஊடியர்கள் தமிழ்நாடு முழுக்க ஒரு நாள் ஒன்றுக்கு மூன்று கோடியில் இருந்து 5 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கிறார்கள்.அதாவது நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் என்றால் மாதம் ஒன்றுக்கு அதாவது 28 நாளுக்கு 140 கோடி ரூபாய் அதிகாரிகள் மற்றும் ஊழிர்களின் தாலியை அறுக்க வேண்டியுள்ளது.  தமிழகத்தில்  மொத்தம் உள்ள 3958  டாஸ்மாக்  கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 1 கோடியிலிருந்து 2கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. தேவைப்பட்டால் அரசு உளவுத்துறை மூலம் விசாரணை நடத்தி உண்மையை தெரிந்து கொள்ளலாம்.செந்தில் பாலாஜி.

அதாவது அதிகாரிகளின் சூப்பரைசர்கள் சொத்து மதிப்பு சராசரியாக 2.50 கோடியிலிருந்து 4 கோடி ரூபாய் வரை இருக்கிறது. அதே போல மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், குடோன் மேனேஜர்களின் சொத்து மதிப்பு 5 கோடியிலிருந்து 7, 10 கோடி ரூபாய் வரை உள்ளது. மற்ற உயரதிகாரிகள் அரசுத்துறை செயலாளர்கள், டாஸ்மாக் பொது மேலாளர்களின் சொத்து மதிப்பை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்…. இந்த ஊழலை தமிழக அரசு எப்படி ஒழிக்கப்போகிறது ஊழல் செய்து கொண்டிருக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.முதலமைச்சர் ஜோசப் விஜய்.

இதுகுறித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது கேரளா மாநிலத்தைப் போல சரியான விலைக்கு மதுவை விற்பதும்  பில் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் மேலும் கூடுதல் விலை கொடுத்து வாங்காத சூழ் நிலையை புதிய அரசு  உருவாக்க வேண்டும் என்கின்றனர் தமிழகத்தின் குடிமகன்கள்.

இதையும் படிங்க.!