Chennai Reporters

திருத்தணி அருகே சொகுசு காரில் திடீர் தீ விபத்து அதிர்ஷ்டவசமாக கணவன்-மனைவி உயிர்தப்பினர்.

திருத்தணி அடுத்த புதூர் பகுதியில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீ விபத்து. திருத்தணி பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் (45) அவரது மனைவி ஆஷா(40) (கணவன்-மனைவி) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கணவன் மனைவி இருவரும் திருத்தணி பகுதியில் இருந்து திருவள்ளூர் வந்து விட்டு மீண்டும் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த போது திருவள்ளூர் அடுத்த புதூர் டி.டி. தனியார் மருத்துவக் கல்லூரி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அவரது காரில் இருந்து முன் பக்கத்தில் புகைமூட்டம் ஏற்பட்டதை பார்த்து.

அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி முன் செல்வதற்குள் தீ மளமளவென பற்றி எரிந்தது அதிர்ந்து போன கணவன் மனைவி இருவரும் உடனடியாக காவல்துறையினருக்கு தீயணைப்பு துறையிணருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு

விரைந்து வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்…

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!